கர்நாடகா : பகுஜன் சமாஜ் கட்சி அமைச்சர் திடீர் பதவி விலகல்

பெங்களூரு

குஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த கர்நாடக அமைச்சர் மகேஷ் திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை அதனால் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் மஜத ஆட்சி அமைத்தது. அக்கட்சியின் தலைவர் குமாரசாமி முதல்வராக பதவி ஏற்றார். இந்த தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பாகா ஒரே ஒரு உறுப்பினர் மட்டுமே வெற்றி பெற்றார்.

குமாரசாமி அமைச்சரவையில் மாநில தொடக்கக் கல்வித்துறை  அமைச்சராக பகுஜன் சமாஜ் கட்சியின் ஒரே உறுப்பினரான மகேஷ் பதவி வகித்து வந்தார். அவர் இன்று திடீர் என ராஜினாமா செய்துள்ளார். தனது சொந்த காரணங்களுக்காக அவர் ராஜினாமா செய்ததாக தெரிவித்துள்ளார்.

Tags: Karnataka : BSP minister mahesh resigned