காஞ்சிபுரம்: கோவில் அமைந்துள்ள அலுவலகத்தில் பணியாற்றி வரும் பெண் ஊழியரிடம், கோவிலின் செயல் அலுவலர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதுதொடர்பாக செயல்அலுவலர் இதுவரை கைது செய்யப்படாதது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சபூத ஸ்தலங்களில் மண் ஸ்தலமாக விளங்குவது காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவில். இக்கோவிலின் செயல் அலுவலராக பணிபுரிந்து வரும் வேதமூர்த்தி என்பவர் உடன் பணிபுரியும் பெண் ஊழியரை பட்ட பகலில் அலுவலகத்தில் யாரும் இல்லாத நேரத்தில் பாலியல் சீண்டல் ஈடுபட்டுள்ளார்.

அந்தக் காட்சி  தொடர்பான சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமாக புகார் கொடுக்காததால், அந்த செயல்அலுவலர் மீது காவல்துறையும், அறநிலையத்துறையும் நடவடிக்கை எடுக்காமல் கண்மூடி இருந்து வருகிறது. இது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

பெண்கள் தொடர்பாகவோ, அரசுக்கு  எதிராகவோ  சமூக வலைதளங்களில் செய்தியோ, வீடியோவோ வெளியிட்டால் உடடினயாக கைது செய்ய பறந்த வரும் காவல்துறை, கோவிலுக்குள்ளேயே ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்யும் வகையில் அநாகரிக செயலில் ஈடுபட்ட செயல் அலுவலர் வேதமூர்த்தியை போக்சோ சட்டத்தில் கைது செய்ய வேண்டும் சமூக வலைதளங்களில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த செயல் அலுவலர் ஏற்கனவே செங்கல்பட்டு மாவட்டத்தில் பணிபுரிந்த போது இதே போன்று சர்ச்சையில் சிக்கினார். மேலும் இவர் பணிபுரியும் திருக்கோயில்களில் எப்போதுமே இவர் மீது அதிக அளவில் குற்றம் சாட்டப்படுவது வழக்கமாக உள்ளது.