சென்னை:

டிகர் கமலஹாசன், தேமுதிக தலைவர் விஜயகாந்தை இன்று, அவரது அலுவலகத்தில்  சந்தித்து பேசினார்.

வரும் 21ந்தேதி முதல் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு செய்ய உள்ள கமல், தமிழகத்தில் உள்ள முக்கிய தலைவர்கள் மற்றும் முன்னாள் அதிகாரிகளை சந்தித்து பேசி வருகிறார்.

ஏற்கனவே கேரள முதல்வர் பிரனாயி விஜயன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போன்றவர்களை சந்தித்த கமல் சில நாட்களுக்கு முன்பு முன்னாள் தேர்தல் ஆணையாளர் டி.என்.சேஷனையும் சந்தித்து பேசினார்.

அதைத்தொடர்ந்து, கம்யூனிஸ்டு மூத்த தலைவர் நல்லக்கண்ணு மற்றும் நேற்று திமுக தலைவர் கருணாநிதி, ஸ்டாலின் உள்பட ரஜினியையும் சந்தித்து பேசினார்.

இந்நிலையில் இன்று நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தை சந்தித்து பேசினார்.  சென்னை கோயம்பேட்டி உள்ள தேமுதிக தலைமை அலுவலகம் வந்த அவரை, கட்சியின் நிர்வாகி எல்.கே.சுதீஷ் வரவேற்று அழைத்துச் சென்றார்.

அங்கு விஜயகாந்தை கமல் சந்தித்து பேசினார். அப்போது இருவரும் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து பேசியதாக கூறப்படுகிறது.