காடுவெட்டி குருவின் மகள் திருமணம் இன்று எளிமையாக நடந்தது

காடுவெட்டி குருவின்  மகள் விருத்தாம்பிகைக்கும் – குருவின் மூன்றாவது தங்கை சந்திரகலாவின் மகன் மனோஜூக்கும் இன்று எளிய முறையில் திருமணம் நடந்தது.

பா.ம.க.வின் ஆணிவேர் என்று கருதப்படும் வன்னியர் சங்கத்தின் தலைவராக செல்வாக்குடன் வலம் வந்தவர் காடுவெட்டி குரு. அக்கட்சியினராலும் வன்னியர் சங்கத்தினராலும் மாவீரன் என்று அழைக்கப்பட்டவர். சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.

மணமக்களை வாழ்த்தும் கனலரசன்

இந்த நிலையில் கடந்த மே மாதம் காடுவெட்டி குரு உடல் நலக்குறைவால் மறைந்தார்.

அதன் பிறகு, “காடுவெட்டி குரு மறைந்த நிலையில் வீட்டுக்கடன் கட்ட முடியாத அளவுக்கு பண நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆகவே காடுவெட்டி குரு பயன்படுத்திய வாகனத்தை விற்க இருக்கிறோம். வாங்க விரும்புகிறவர்கள் அணுகவும்” என்று காடுவெட்டி குருவின் அக்காள் மகன், தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.  இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதே நேரம், பா.ம.க. தரப்பில் இருந்து காடுவெட்டி குரு குடும்பத்துக்கு உதவப்போவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் காடுவெட்டி குருவின் மனைவி (சொர்ணலதா) ஒரு கடிதம் எழுதியதாக முகநூலில் சிலரால் பதிவிடப்பட்டது. அதில், “என் கணவர் காடுவெட்டி குரு மறைந்த பிறகு, திக்குதிசை தெரியாமல் தவிக்கிறேன். என் மகள் விருதாம்பிகை, மகன் கனலரசன் ஆகியோரைக்கூட பார்க்கமுடியவில்லை. எங்களது சொத்துக்காக எங்களை ஏதாவது செய்துவிடுவார்களோ என்று பயமாக உள்ளது.  அய்யா (பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்)தான் எங்களுக்கு நல்லவழி காட்டவேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் காடுவெட்டி குருவின் மகன் கனலரசன், தனது முகநூல் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில், தனது தாயாரை பல நாட்களாக காணவில்லை என்றும். அவரது உறவினர்கள் அவரை பலவந்தமாக எங்கோ அடைத்துவைத்திருக்கிறார்கள் என்றும் அவரை மீட்க பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் உதவ வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த நிலையில் இன்று காடுவெட்டி குருவின்  மகள் விருதாம்பிகைக்கும் – குருவின் மூன்றாவது தங்கை சந்திரகலாவின் மகன் மனோஜூக்கும் இன்று எளிய முறையில் திருமணம் நடந்தது.

திருமண விழாவில் மணமகன் மனோஜ் குடும்பத்தினர் அனைவரும் கலந்துகொண்டனர். மணமகள் விருதாம்பிகாவின் தாயார் எங்கிருக்கிறார் என்பது தெரியாத நிலையில் அவரது மகனும் மணமகள் விருதாம்பிகாவின் தம்பியுமான கனலரசன் கலந்துகொண்டார்.

#Kaduvetti #Guru #Vanniar #Sangam #daughter #Marriage

https://patrikai.com/kaduvetti-gurus-daughter-and-son-in-law-are-threatened-by-some-people/

Tags: #Kaduvetti #Guru #Vanniar #Sangam #daughter #Marriage, kaduvetti-gurus-daughter-married- simple today, காடுவெட்டி குருவின் மகள் திருமணம் இன்று நடந்தது