ரிலையன்ஸ் ஜியோவின் ஹேப்பி நியூ இயர் ஆபர் இந்த மாதம் 31ந்தேதியுடன் முடிவடைகிறது. இதற்காக ரூ.99 கொடுத்து பிரைம் மெம்பர்சிப் பதிய வேண்டும் என ஜியோ அறிவித்திருந்தது.

ஏற்கனவே இலவச அழைப்பு மற்றும் டேட்டா காரணமாக அதிக வாடிக்கையாளர்களை பெற்ற ஜியோ நிறுவனம், தற்போது ஜியோ வாடிக்கையாளராக தொடர ஹேப்பி நியு இயர் ஆபர் என்ற பெயரில்  ரூ.99 உறுப்பினர் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும், ஏப்ரல் முதல் நாள் ஒன்றுக்கு ரூ.10 வீதம் மாதம் ஒன்றுக்கு 303 ரூபாய் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்றும் அறிவித்தது.

இந்நிலையில், இந்த மாதம் 31ந்தேதியுடன் ஜியோவின்  ஹேப்பி நியூ இயர்  ஆபர் முடிவடைகிறது.

ஜியோ சேவை தொடங்கி  170 நாட்களில் 10 கோடி வாடிக்கையாளர்களை பிடித்துள்ளதாக அதன் தலைவர் முகேஷ் அம்மானி பெருமிதம் கொண்டார்.

அதைத்தொடர்ந்து, ஏப்ரல் 1 முதல் இலவச சேவை கிடையாது என்றும், 99ரூபாய் கொடுத்து பிரைம் மெம்பர்சிப் உறுப்பினராக வேண்டும் என்றும், ஏப்ரல் முதல் 303 ரூபாய் கொடுத்து மாதாமாதம் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்றும் அறிவித்திருந்தது.

ஜியோவின் இந்த அறிவிப்புக்க  போட்டியாக மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களும் களத்தில் குதித்துள்ளன.  ஏர்டெல் டெலிகாம் நிறுவனம் மற்றும் தற்போது இணைந்த ஐடியா – வோடபோன் நிறுவனங்கள்  ஜியோவுக்கு கடும் நெடுக்கடிகளை கொடுத்து வருகின்றன.

இந்நிலையில் ஜியோவின் கட்டண அறிவிப்பு காரணமாக, ஜியோவின் வாடிக்கையாளர்கள் பெரும்பாலானோர் ஜியோவின் சேவையை தொடர விரும்பாத நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போதுவரை, ஜியோ பிரைம் மெம்பர்சிப்சில் 13 சதவிகிதத்தினரே உறுப்பினராக பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதற்கிடையில் ஜியோவின் தரம் மற்றும் நெட்வொர்க் விரிவாக்கம் இல்லை என்றும்,  பிரைம் மெம்பர்சிப் ஆபர் மேலும் சில காலம் நீட்டிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஜியோவுக்கு போட்டியாக உள்ள ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற டெலிகாம் நிறுவனங்களின்  தற்போதைய வாடிக்கையாளர் பிப்ரவரி மாத இறுதியில் 2.27 மில்லியன் என்றும் இது 817.42 மில்லியனாக உயரும் வாய்ப்புள்ளதாகவும்  இந்திய செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கம் (COAI)  தெரிவித்து உள்ளது.

இதன் காரணமாக ஜியோ மேலும் ஏதேனும் அதிரடி அறிவிப்புகளை அறிவுக்குமா என வாடிக்கை யாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.