கோத்தகிரி,

ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் காவலாளி மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஊட்டி அருகே உள்ள கோத்தகிரி  கொடநாட்டில்  முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் உள்ளது. ஜெ. அவ்வப்போது ஓய்வு எடுக்க இங்கு வருவது வழக்கம். அவரது மறைவுக்கு பிறகு கொடநாடு எஸ்டேட்டை காவலாளிகள் மட்டுமே  கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் மர்ம நபர்களால் நள்ளிரவில்  கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளியான கிஷன் பகதூரும் படுகாயம் அடைந்தார். காவலாளிகள் இருவதும் நேபாளத்தை சேர்ந்தவர்கள்.

நள்ளிரவு  காரில் வந்து மர்ம கும்பல் பகதூரை கத்தியால் குத்தி கொலை செய்ததாகவும், கிஷன் பகதூரை கட்டி போட்டு சென்றதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெ. மறைவுக்கு பிறகு அதிமுகவில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. அவரத தோழி சசிகலா சிறைக்கு செல்லப்பட்டார். அவரது சிறுதாவூர் பங்களாவில் தீ விபத்து, தற்போது கொடு நாடு எஸ்டேட்டில் கொலை என்ற தொடர்ந்து அசம்பாவிதங்கள் நடைபெற்று வருகிறது.

இது கட்சி தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காவலாளி கொலை குறித்து நீலகிரி எஸ்.பி. முரளி ரம்பா தலைமையில்  போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.