குற்றவாளிகளுக்கு மாலை: மத்தியஅமைச்சர் ஜெயந்த் சின்ஹா வருத்தம் தெரிவித்தார்

ஜார்கண்ட்:

குற்றவாளிகளுக்கு மாலை அணிவித்த  விவகாரத்தில் மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா வருத்தம் தெரிவித்து உள்ளார்.

இந்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா பதவி விலக வேண்டும் என்று காங் கிரஸ் கட்சி வலியுறுத்திய நிலையில், தற்போது வருத்தம் தெரிவிப்பதாக ஜெயந்த் சின்ஹா கூறி உள்ளார்.

மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி பசு பாதுகாவலர்கள் அலிமுதீன் அன்சாரி என்பவரை அடித்துக்கொன்றனர்.  கடந்த ஆண்டு இந்த சம்பவம் நடைபெற்றது. இதில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 11 பேருக்கு நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்தது.

இந்த வழக்கின் மேல்முறையீடு செய்யப்பட்டதில், அவர்கள் 11 பேருக்கு கோர்ட்டு ஜாமின் வழங்கி யது. சிறையில் இருந்து வெளியே வந்த அவர்கள்  மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வௌயாகி வைரலாகி  சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

இதுகுறித்து ஜெயந்த் சின்ஹாவின் தந்தையும், மத்திய முன்னாள் அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா, எனது மகனின் செயலை நான் ஏற்கவில்லை என்று கண்டனம் தெரிவித்து இருந்தார்.

மத்திய அமைச்சரின் இந்த செயல் குறித்து,  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரமோத் திவாரி கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.  மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் பல்வேறு வெறுப்பு நடவடிக்கைகள் ஆங்காங்கே அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன. அவை குறித்து பிரதமர் மோடியம், பாஜக தலைவர் அமித் ஷாவும் எந்தக் கருத்தும் தெரிவிப்பதில்லை. மாறாக, மெளனத்தையே அவர்கள் பதிலாக அளிக்கின்றனர்.

இத்தகைய சமூக விரோத நடவடிக்கைகளுக்கு பாரபட்சமின்றி பிரதமர் மோடி எப்போது கண்டனம் தெரிவிக்கப் போகிறார்? அல்லது இதன் மூலமாக அரசியல் ஆதாயம் அடையலாம் எனக் கருது கிறாரா? அவரது தலைமையிலான அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் ஜெயந்த் சின்ஹா, கொலை குற்றவாளிகளுக்கு மரியாதை செலுத்தியிருக்கிறார். அவரை பிரதமர் மோடி நீக்க வில்லை என்றால், ஜெயந்த் சின்ஹாவே தாமாக முன்வந்து பதவி விலக வேண்டும் என்று கூறியிருந்த நிலையில், தற்போது மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா வருத்தம் தெரிவிப்பதாக  கூறி உள்ளார்.

‘இந்த விஷயம் குறித்து நான் பலமுறை கூறி உள்ளதாகவும், மீண்டும் இதுகுறித்து  பேசுவதில் நியாயமில்லை. சட்டம் அதன் வேலையை செய்யும் என்றும். நாங்கள் குற்றவாளிகளை தண்டிப்பதற்கும், அப்பாவித்தனத்தை விடுவிப்பதற்கும் எப்போதும் உதவி செய்வோம் என்று கூறி உள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் அவர்களுக்கு மாலை அணிவித்தத்ற்காக நான் வருந்துகிறேன் “என்று  கூறி உள்ளார்.
English Summary
Jayant Sinha expresses ‘regret’ over garlanding lynching convicts, After drawing criticism from all quarters, Minister of State for Civil Aviation Jayant Sinha on Wednesday expressed regret over his recent act of garlanding eight people convicted of lynching a man to death.