அஜீத் – விஜய்

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள ஜி.எஸ்.டி. வரி காரணமாக பல பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த ஜி.எஸ்.டி. வரிக்கு சினிமா டிக்கெட்டும் தப்பவில்லை.  இதற்கு 28 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. தவிர தமிழக அரசு கேளிக்கை வரியாக 30 சதவீதம் விதித்துள்ளது. இதனால் தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் 58 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது.

இதனால் டிக்கெட் விலையை அதிகப்படுத்த வேண்டியிருக்கிறது. ஆகவே ரசிகர்கள் தியேட்டருக்கு வர மாட்டார்கள் என்று திரைத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். திரையரங்கங்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்தன. பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்டுவிட்டன.

ஜெயம் ரவி

இந்த நிலையில் ஜிஎஸ்டி வரிக்கு எதிராக நடிகர்கள் விஜய், அஜித் குரல் கொடுக்காதது வருத்தம் அளிப்பதாக நடிகர் ஜெயம் ரவி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய ஜெயம் ரவி, “ ஜி.எஸ்.டி வரிவிதிப்பால் தமிழ் திரைத்ததுரைக்கு மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதன் காரணமாக திரையரங்கு உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் தீர்வு கிடைக்காமலேயே திரையரங்குகளை திறக்கும்படி ஆகிவிட்டது.

இந்த நிலையில் திரைத்துறையினர் அனைவரும் ஒன்றினைந்து ஜி.எஸ்.டி. வரிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். ஆனால் விஜய், அஜித் போன்ற பிரபல நடிகர்கள் ஜி.எஸ்.டிக்கு எதிராக குரல் கொடுக்கவில்லை. திரையுலக்கிற்கு பிரச்சினை ஏற்பட்டால் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். ஆனால் தமிழ் திரை உலகினரிடையே ஒற்றுமை இல்லை” என்று வருத்தத்துடன் தெரிவித்திருக்கிறார் ஜெயம் ரவி.