சென்னை,
றைந்த ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலத்திற்கான பீரங்கி வண்டி சென்னை வந்தது.
மறைந்த முதல்வரின் இறுதி ஊர்வலம் மாலை 4.30 மணி அளவில் நடைபெற இருக்கிறது.
அவரது உடல் அலங்கரிக்கப்பட்ட பீரங்கி வண்டியில் ராஜாஜி ஹாலில் இருந்து எடுத்து செல்லப்பட்டு அண்ணா சதுக்கம் எம்ஜிஆரின் சமாதி வளாகத்தில் நடைபெற இருக்கிறது.
இதற்கான பீரங்கிவண்டி,டில்லியில் இருந்து  தனி விமானத்தின் மூலம் சென்னை  வந்துள்ளது.
கடந்த 75 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா, சிகிசிசை பலனளிக்காமல்  நேற்று இரவு மரணமடைந்தார்.
untitled-1
அவரது உடல்  காலை 6 மணி முதல் சென்னை ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று வைக்கப்பட்டுள்ளது.
பிரமதர் மோடி, மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு உள்ளிட்ட தலைவர் சென்னை வந்து ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தினர்.
மறைந்த ஜெயலலிதாவை, கடைசியாக ஒரு முறையாவது  பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலுடன் லட்சக்கணக்கான  அதிமுக தொண்டர்கள் ராஜாஜி ஹால் முன்பு கூடியுள்ளனர். அதேபோல் அவரது உடல் அடக்கம் செய்யப்பட இருக்கும் மெரினா பீச்சிலும் கூட்டம் அலைமோதி வருகிறது.
இன்று மாலை நடைபெறும் இறுதி ஊர்வலத்திற்கு தேவையான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ராஜாஜி ஹாலில் இருந்து அவரது உடல் ராணுவ பீரங்கியில் ஏற்றப்பட்டு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பின்னர் கடற்கரை மணலில் உள்ள எம்.ஜி.ஆர் சமாதி அருகில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலம் செல்வதற்கான பீரங்கி வண்டி டெல்லியில் இருந்து பாதுகாப்பு அமைச்சகம் விமானம் மூலம் சென்னை அனுப்பி வைத்தது. தற்போது அந்த வண்டி விமான நிலையத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இன்னும் சிறிது நேரத்தில் ராஜாஜி ஹால் வந்தடையும் பீரங்கி வண்டி  மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அதில் ஜெயலலிதாவின் உடல் ஏற்றப்பட்டு இறுதி ஊர்வலம் நடைபெறும்.