சென்னை :

றைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் தமிழக சட்டசபையில் திறக்கப்பட்டது.

தமிழகத்தில் ஐந்து  முறை முதல்வராக இருந்த ஜெயலலிதாவை கவரவிக்கும் விதமாக அவரின் படத்தை திறக்க உள்ளதாக தமிழக அரசு கடந்த வாரம் அறிவித்தது.

அதே நேரம் சொத்துக்குவிப்பு ஊழல் வழக்கில் நீதிமன்றத்தால் குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதாவின் உருவப்படத்தை சட்டசபையில் திறக்கக்கூடாது என்று தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

இந்த நிலையில் அறிவித்தபடி இன்று ஜெயலலிதா உருவப்படம் சட்டசபையில் திறக்கப்பட்டது.   ஏழு7 அடி உயரமும், ஐந்து அடி அகலமும் கொண்ட ஜெ.,வின் உருவப்படத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார்.

சென்னை கவின் கலைக் கல்லூரி மாணவர்களால் ஜெ.,வின் உருவப்படம் உருவாக்கப்பட்டது. ஏற்கனவே தமிழக சட்டசபையில் ராஜாஜி, காமராஜர் உள்ளிட்ட  பத்து  தலைவர்களின் உருவப்படங்கள் இடம்பெற்றுள்ளது. பதினோராவது  படமாக ஜெயலலிதா படம் இடம்பெற்றிருக்கிறது.

இத்திருவுருவ படத்தை  காலை 9.30 மணிக்கு சபாநாயகர் ப.தனபால் திறந்து வைத்தார்.  முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஜெயலலிதாவின் திருவுருவப் படம் ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் அமரும் பகுதியில் முதல்வர் இருக்கைக்கு பின்புறம், முதல் மற்றும் இரண்டாவது பிளாக் இடையில் உள்ள தூணில் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த விழாவை ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.,க்கள் புறக்கணித்துள்ளனர். திமுக கூட்டணி கட்சியான காங்.,ம் இந்த விழாவை புறக்கணித்துள்ளது. சுற்றுப்பயணத்தில் இருப்பதால் சுயேட்சை எம்எல்ஏ தினகரனும் இவ்விழாவில் கலந்து கொள்ளவில்லை. திமுக இவ்விழாவை புறக்கணித்ததால், திமுக எம்.எல்.ஏ.,க்களின் இருக்கைகள் அதிமுக எம்.பி.,க்கள் , நீதிபதிகள், அதிமுக நிர்வாகிகள் ஆகியோருக்கும் திமுக எம்.எல்.ஏ.,க்களின் இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தது.