நெட்டிசன்
ஜெ. உடல்நிலை: அப்பல்லோ அறிக்கை சொல்வது என்ன!
டி.என். கோபாலன் அவர்கள் முகநூல் பதிவு:
நேற்று அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட செய்தி அறிக்கை, முதல்வரின் உடல்நிலை எப்படி இருக்கிறது என்பதை மறைமுகமாக சொல்லி விட்டது. மருத்துவத் துறை சொல்லாடல்கள் புதிரானவை. அதைப்பற்றி நகைச்சுவையாகவும் சொல்லலாம். ஆனால் அது விஷயத்தின் தீவிரத்தை நீர்த்துவிடச் செய்யும் என்பதால் தவிர்க்கிறேன்.
The comprehensive treatment plan including appropriate antibiotics, respiratory support and other allied clinical measures are being continued.

மேலே குறிப்பிட்ட respiratory support என்பதில் சாதாரண சுவாச உறிஞ்சு கருவிகள் முதல், முழுக்கவும் இயந்திரத்தால் செயல்படும் ஆக்சிஜன் மாஸ்க் வரை எல்லாமே அடங்கும்.
ஆனால்…
CM is under observation of a panel of doctors consisting of intensivists, cardiologists, respiratory physicians, infectious disease specialists and diabetologist.  என பல வல்லுநர்களால் கவனிக்கப்படுகிறார் என்றும்,

The present treatment regimen includes continued respiratory support, nebulisation, drugs to decongest the lungs, antibiotics, nutrition, general nursing care and supportive therapy.

சர்க்கரை நோய், நுரையீரல் தொற்று, சுவாசப் பிரச்சினை உள்ளிட்ட பல வகையான பிரச்சினைகளுக்கு சிகிச்சைகள் தரப்படுகின்றன என்று கூறியிருப்பதைப் பார்க்கையிலும், முதல்வரின் உடல்நிலை மிகவும் சிக்கலான நிலையில் இருப்பதாகவே தோன்றுகிறது.
… Hon’ble CM will require a longer stay in the hospital. 
ஓரிரு நாட்கள் – a day or two – இல்லை. இன்னும் சில நாட்கள் – a few more days – இல்லை. அதாவது, நாட்கள் கணக்கில்லாமல் longer stay என்று சொல்லியிருப்பது கவலை தரும் விஷயம்.
தா. பாண்டியன் அப்பல்லோ சென்று வந்த பிறகு கூறிய விஷயம் பெரும்பாலும் இங்கே நகைச்சுவையாக மட்டுமே பார்க்கப்பட்டது.
அவர் சொன்னதில் கவனிக்க வேண்டிய விஷயம்.
1. அவர் முதல்வரை சந்திக்கவில்லை. அதாவது, சில நாட்களுக்கு முன்னால் சென்ற கவர்னரைப் போலவே பாண்டியனும் ஜெயலலிதாவைப் பார்க்கவில்லை.
2. “முதல்வர் பேசக்கூடிய நிலையில் இருந்தால் வதந்திகளைப் பரப்பாதீர்கள் என்றுதான் சொல்லியிருப்பார்” என்றார் தா.பா. ஆக, முதல்வர் ஜெயலலிதா பேசும் நிலையில் இல்லை என்று அவரைப் பார்த்தவர்கள் தா.பாவிடம் சொல்லியிருக்கிறார்கள்.
பேச முடியாத நிலையில், தீவிர மருத்துவ சிகிச்சைப் பிரிவில், கிட்டத்தட்ட சகலவிதமான வல்லுநர்களின் கவனிப்பில் முதல்வர் இருக்கிறார் என்பது தமிழகம் கவலைப்பட வேண்டிய விஷயம்.
அதுவும் இன்னும் எத்தனை நாட்கள் அங்கேயே இருக்க வேண்டியிருக்கும் என்றும் தெரியாத நிலையில் இருப்பது இன்னும் கவலைக்குரிய விஷயம்.
jeya1
ஒரு மாநிலத்தை நிர்வகிக்கும் முதல்வரின் உடல்நிலை எப்படியிருக்கிறது என்பதை அந்த மாநிலத்தின் மக்களுக்குத் தெரிவிக்காமல் மறைத்து வைப்பதன் பின்னே இருப்பது யார்? அரசா இல்லை தனிநபர்களா?
அரசு என்ற ஒன்று இருப்பதாகவே தெரியவில்லை. அப்படியானால், சில தனிநபர்களின் கட்டுப்பாட்டில்தான் முதல்வர் இருக்கிறார் என்று தெரிகிறது.
அந்தத் தனிநபர்கள் இப்போதே இப்படி இருக்கிறார்கள் என்றால், நாளை விபரீதமாக ஏதும் ஆகிவிட்டால் எப்படி இருப்பார்கள்?
அதிமுகவினர் சிந்திக்க வேண்டிய, எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரமிது.
டிராபிக் ராமசாமியின் மனு நிராகரிக்கப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. பிரச்சினையின் தீவிரத்தை நீதிமன்றம் உணர்ந்திருப்பதாகத் தெரியவில்லை.
அப்பல்லோ மருத்துவமனை தனியார் நிறுவனம். தேவைப்பட்ட அளவுக்கு வெளிநாடுகளிலிருந்து சிறப்பு மருத்துவர்களை வரவழைத்து ஆலோசிக்க முடியும். அப்படித்தான் ரிச்சர்டு வந்து சென்றார்.
அப்படியிருக்கையில் தில்லியில் உள்ள (மைய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள) எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து சிறப்பு மருத்துவர்கள் – அதுவும் ஒரு நாளுக்காக மட்டும் – வந்து சென்றது எதனால்?
அப்பல்லோ அழைத்ததா இல்லை மைய அரசு அனுப்பி வைத்ததா? அப்பல்லோ அழைத்தது என்றால், லண்டனிலிருந்து மருத்துவரை அழைப்பதற்கு முன்பே எய்ம்ஸ் மருத்துவர்களை அழைத்திருக்கலாமே?
ஆகவே, எய்ம்ஸ் மருத்துவர்கள் வந்தது மைய அரசின் யோசனையாக இருக்கும் என்று தோன்றுகிறது.
தமிழகத்தை நேரடி தேர்தல் மூலம் ஒருகாலத்திலும் பிடிக்க முடியாத பாஜக, புழக்கடை வழியாக நுழைந்து பிடிக்க முயற்சி செய்யக்கூடும்.
இதுகுறித்து தமிழக மக்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்