சென்னை:
முதல் நாளில் 37 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில், ஒமிக்ரான் பரவலை தடுக்கும் வகையில், நாடு முழுவதும் 15 முதல் 18 வயதுடையோருக்கு தடுப்பூசியும், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார்.

அதன்படி, தமிழ்நாட்டில் தமிழகத்தில் 15 முதல் 18 வயதுடை 33 லட்சம் பேரில் 27 லட்சம் பேர் பள்ளியில் பயில்வ தால் அவர்கள் அனைவருக்கும் பள்ளிகளிலேயே பெற்றோரின் அனுமதியுடன் தடுப்பூசி செலுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

அதன்படி, இன்று ‘சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 15 வயது முதல் 18 வயது சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், முதல் நாளான இன்று இரவு ஏழு மணி நிலவரப்படி 37,84,212 குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக கொரோனா இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.