ஐடி எஞ்சினீயர் குடும்பத்துடன் தற்கொலை : புனேவில் தொடரும் தற்கொலைகள்

Must read

புனே

புனே நகரில் தற்கொலைகள் அதிகரித்து வருகிறது

புனே நகர்ப் பகுதி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் தற்கொலைச் செய்திகள் அதிகரித்து வருகின்றன.     நேற்று நகரின் பொசாரி பகுதியில் உள்ள ஒரு விடுதியில் ஒரு 17 வயதுப் பெண்ணும் 25 வயது வாலிபரும் ஒரு அறையில் தற்கொலை செய்துக் கொண்டு பிணமாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர்.

அதே போல செவிலியர் விடுதி அறையில் ஒரு செவிலியர் அழுகிய நிலையில் பிணமாக அவர் அறையில் கண்டெடுக்கப் பட்டுள்ளார்.

இன்று காலை பானர் பஷான் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கணவன், மனைவி இருவரும் தங்களின் 4 வயது ஆண் குழந்தையுடன் தற்கொலை செய்துக் கொண்டது தெரிய வந்துள்ளது.

தற்கொலை செய்துக் கொண்ட ஐடி எஞ்சினீயர் ஜெயேஷ்குமார் படேல் (வயது 34) அவர் மனைவி பூமிகா (வயது 30) மற்றும் அவர்கள் மகன் அக்‌ஷய் (வயது 4) ஆகியோர்  வசித்து வந்தக் குடியிருப்பு  2, 3 தினங்களாக திறக்கப்படாமல் உள்பக்கமாக பூட்டிய நிலையில் இருந்துள்ளது.   அக்கம் பக்கத்தினர் அழைப்புக்கும் பதில் வராததால் அவர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

பக்கத்து வீட்டு பால்கனி வழியாக படேலின் வீட்டுக்குள் நுழந்து கதவை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்த காவல் துறையினர் அழுக ஆரம்பித்த நிலையில் அவர்களின் சடலங்களை கண்டு எடுத்துள்ளனர்.   கயிற்றினால் அழுத்தப்பட்ட அடையாளங்களுடன் படேல் மற்றும் அவர் மனைவியின் சடலங்களும்,  விஷம் அருந்திய நிலையில் அவர்கள் மாகன் சடலம் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

மூவரின் உடலும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பபட்டுள்ளது.    தற்கொலைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article