2021-ம் ஆண்டு விண்வெளிக்கு மனிதனை அனுப்புவதில் இஸ்ரோ உறுதி

ஸ்ரீஹரிகோட்டா:

ககன்யான் என்ற திட்டத்தின் மூலம் விண்ணிற்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் இஸ்ரோ தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

பி.எஸ்.எல்.வி.சி-43 ராக்கெட் மூலம் பூமியை கண்காணிக்கும் எச்.ஒய்.எஸ்.ஐ.எஸ் செயற்கைக்கோள், நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த எச்.ஒய்.எஸ்.ஐ.எஸ். செயற்கைகோள் சண்டிகரில் உள்ள ஆய்வு மையத்தில் தயாரிக்கப்பட்டது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் கே.சிவன் கூறுகையில், இந்த வெற்றியின் மூலம் 30 செயற்கைக் கோள்களை விண்ணில் வெற்றிகரமாக செலுத்திய நாடு இந்தியா என்ற பெருமையை தற்போது பெற்றுள்ளது, என்றார்.

அப்போது வணிக ரீதியாக இந்தியாவில் இருந்து 31 செயற்கை கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். ஒரே ராக்கெட்டில் பெரியதும் சிறியதுமாக, வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 30 செயற்கைக் கோள்கள் அனுப்பப்பட்டிருக்கிறது.

நேற்று விண்ணில் ஏவப்பட்ட செயற்கைக் கோள் விவசாய மேம்பாட்டிற்காக உருவாக்கப்பட்டது. இஸ்ரோ இதுவரை 20 நாடுகளை சேர்ந்த 270 செயற்கைகோள்களை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தியுள்ளது. இது உலக அளவில் இஸ்ரோவுக்கு நன்மதிப்பை பெற்று தந்துள்ளது.

புவி வட்டப்பாதையில் இப்போது இஸ்ரோவின் 47 செயற்கைகோள்கள் தகவல் தொடர்புகள், புவி கண்காணிப்பு, அறிவியல் ஆய்வுகள், கடல்சார் ஆய்வுகள் போன்ற பயன்பாட்டுக்காக செயல்பட்டு வருகின்றன.

ககன்யானுக்கு முன்னதாக ஆளில்லா விண்கலம் ஒன்றை வரும் 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் விண்ணில் செலுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.

இதனை தொடர்ந்து 2021ம் ஆண்டு, ஜூலை மாதம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து மனிதர்கள் செல்லும் விண்கலத்தை விண்ணில் செலுத்த உள்ளதாக இருக்கிறது, என்றும் அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், அதிகபட்சம் இந்தியாவில் உள்ள வசதிகளையே ககன்யானில் பயன்படுத்த விரும்புவதாகவும் தெரிவித்தார்.

Tags: 2021-ம் ஆண்டு விண்வெளிக்கு மனிதனை அனுப்புவதில் இஸ்ரோ உறுதி, ISRO, ISRO Sucessfully Launches PSLV C43 with 31 satelites from Sriharikota, PSLVC-43