இந்திய எல்லையில் கடும்குளிரில் தேச பாதுகாப்புப் பணியில் ஈடுப்பட்டுவரும் சிப்பாய்கள் மாதம் ஒருவர் பணியின் போதே இறந்து வருகின்றனர். அவர்களுக்கு கடும்குளிரை தாக்குப் பிடிக்கும் வண்ணம் இஸ்ரோ கண்டுபிடித்த ஒரு குழம்பு (ஜெல்) கொண்டு ஆடை வடிவமைக்க திட்டமிடப் பட்டுள்ளது.

விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் (வி.எஸ்.எஸ்.சி.) விஞ்ஞானிகள் பொதுவெளியில் நிலவும் தீவிர வெப்பநிலையிலிருந்து பாதுகாத்து வெப்ப பரிமாற்றத்திற்கு முதன்மையாக உதவும் ஒரு சிறப்பான நீல ஜெல்லை உருவாக்கினர்.

வி.எஸ்.எஸ்.சி. யின் இயக்குனர் டாக்டர் கே சிவன் கூறுகையில், “விண்வெளிக்கு அனுப்பப்படுகின்ற எங்களது முதல் கட்ட ராக்கெட் என்ஜின்களை காப்பீடு செய்ய ஒரு பொருள் தேவைப்பட்டது. ஏனெனில் வெளியே வெப்பநிலை மிகவும் அதிகமாக உள்ளதால் காப்பு இல்லையென்றால் இயந்திரம் எரிந்துவிடும்”.
“இதை எப்படி அடுத்த நிலைக்கு கொண்டு செல்வது என்பது பற்றி நாங்கள் கலந்து ஆலோசித்துக் கொண்டிருக்கிறோம். இந்த ஜெல்லை பயன்படுத்தி ஒரு சட்டை உருவாக்க உத்தேசித்துள்ளோம்,” என்று அவர் கூறினார்.
ISRO GEL
இந்த கண்டுபிடிப்பு அதிக உயரத்தில் உள்ள  சியாச்சின்னில் சேவையாற்றும் சிப்பாய்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்க முடியும். “இந்த பொருள் பயன்படுத்துவதன் மூலம், ஜாக்கெட்டுகளின் எடை 200 முதல் 300 கிராம் வரையிலும் காலணிகளின் எடை 800 கிராம் வரையிலும் குறைக்க முடியும்,” என்று டாக்டர் சிவன் கூறினார். தற்போது, இந்திய இராணுவம் பயன்படுத்தி வரும் வெள்ளை ஜாக்கெட்டுகள் மற்றும் வெள்ளை காலணிகள் கிட்டத்தட்ட மூன்று கிலோகிராம் எடையுடையதாகும்.
இப்போழுது வரை, இந்திய விண்வெளி கழகம் காப்பு பொருட்களை ஏனைய நாடுகளிடமிந்து வாங்கி கொண்டிருந்தன, இதற்காக அடிக்கடி அந்நிய செலாவணியில் பணம் செலுத்துவதும் சந்தர்ப்பச் செலவுகளினால் சில நேரங்களில் அதிக விலை கொடுத்தும் பொருட்கள் வாங்க வேண்டியுள்ளது.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ஜெல் குளிர்விப்பானாகவும் உடலைக் கதகதப்பாக வத்துக்கொள்ளவும் உதவுகிறது. இதை வெற்றிகரமாக தயாரித்தப் பின்னர், “மேக் இன் இந்தியா” முயற்சிக்கும் ஒரு ஊக்கம் கொடுக்கிறது.
ISRO GEL SIAICHEN
1984 முதல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வரை, லான்ஸ் நாயக், ஹனுமந்தப்பா கோப்பாட் போன்ற 869 இந்திய வீரர்கள் காலநிலை காரணமாக சியாச்சின்னில் இறந்துள்ளனர்.

தற்போது இந்த சூத்திரம் மிகவும் பாதுகாக்கப்பட்ட ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. எனினும், உலகின் லேசான சிந்தடிக் பொருள் தினசரி பொது பயன்பாட்டிற்காக விட்டால் மின்கட்டணத்தை கூட குறைக்க முடியும். ஜன்னலின் மேல் இந்த கெல்லை தீட்டுவதன் மூலம் வெப்பத்தை குறைத்து அறையின் வெப்பநிலையில் குறைக்கும் இதனால் மின்சாரமும் சேமிக்கப்படும். குளிர் காலத்தில் எதிர்மாறாக உட்புறத்தை சூடாக வைக்கும்.
வணிக நோக்கங்களுக்காக அகமதாபாத்தில் இப்பொருட்களை உருவாக்க பேச்சுவார்த்தை  நடந்து கொண்டிருக்கிறது, மேலும் இந்தியாவை “மேக் இன் இந்தியா”விலிருந்து வாருங்கள், இந்தியாவை புதுமைப்படுத்துங்கள் என்று மாற்ற வேண்டும்.