” 2022ம் ஆண்டிற்குள் இந்தியர்கள் விண்வெளிக்கு பயணம் செய்வார்கள் ” – இஸ்ரோ

2022ம் ஆண்டில் விண்வெளிக்கான இந்தியர்களின் பயணம் தொடங்கும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. அதற்கு முன்னதாக சந்திராயன் – 2 விண்கலம் ஜனவரி மாதம் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ கூறியுள்ளது.

space

டெல்லியில் அணுசக்தி துறை இணை அமைச்சர் ஜிதேந்திரா சிங், இஸ்ரோ தலைவர் சிவன் உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் சுதந்திர தினத்தின் போது பேசிய நரேந்திர மோடியின் உரையை நினைவு கூர்ந்தார். அதாவது, வரும் ஜனவரி மாதம் 3ம் தேதி முதல் பிப்ரவரி 16ம் தேதிக்குள் சந்திராயன் -2 விண்கலம் விண்ணில் ஏவப்படும் என்று கூறினார்.

இதற்கான ககன்யான் திட்டம் வெற்றியடைந்தால், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பிய நாடுகளின் பட்டியலில் இந்தியா 4வது இடத்தை பெறும், இதற்கு நாம் நட்பு நாடுகளின் உதவிகளையும் நாட வேண்டியுள்ளது என ஜித்தேந்திர சிங் குறிப்பிட்டார். மேலும், ” ககன்யான் விண்கலம் 2 முறை மணிதர்கள் இல்லாமல் விண்வெளிக்கு அணிப்படும், அது வெற்றியடைந்தால் 3வது முறையாக 2022ம் ஆண்டுக்குள் மூன்று இந்திய விண்வெளி வீரர்களை சுமந்துக் கொண்டு ககன்யான் விண்கலம் விண்ணிற்கு செல்லும் “ என்றும் கூறினார்.

மேலும், இந்த திட்டத்தின் மூலம் விண்வெளி வீரர்களை சுமந்துக் கொண்டு செல்லும் விண்கலம், பூமியிலிருந்து 300 முதல் 400 கி.மீ உயரத்தில் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படும் என்றும், இது ரூ.10,000 கோடிக்கும் குறைவான செலவில் செயல்படுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் ககன்யான் திட்டத்தில் 3 இந்தியர்கள் விண்வெளிக்கு சென்று பூமிக்கு திரும்புவது குறித்த செயல் விளக்க வீடியோ வெளியிடப்பட்டது.

அவரை தொடர்ந்து பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், ” சந்திராயன் – 2 விண்கலம், ஜிஎஸ்எல்வி மார்க் 3 எம்1 மூலம் அனுப்பப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு ஏற்ற முன்னோடம், ஆய்வுக்கருவிகள், ஆய்வூர்தி ஆகியவைகளை சுமந்துக் கொண்டு தரையிறக்கும் லேண்டரின் மொத்த எடை 3.8 டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளது “ என்று தெரிவித்தார்.

சந்திராயன்2 விண்கலத்தை நிலவுக்கு அனுப்ப திட்டம், ஜனவரி 3 முதல் பிப்ரவரி 16ம் தேதிக்குள் நிறைவேற்றப்படும் என்றும், இது வெற்றிகரமாக அமையும் பட்சத்தில், நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கும் முதல் திட்டமாக சந்திராயன் -2 இருக்கும் எனவும் சிவன் கூறினார். மேலும், இந்த திட்டம் இஸ்ரோவின் வரலாற்றில் மிகவும் சவாலானதாக இருக்கும் என சிவன் குறிப்பிட்டார்.




English Summary
ISRO: 'Gaganyaan' Carrying 3 Indians Will Be Able To Reach Space In Just 16 Minutes In 2022