மும்பை:
பிஎல் தொடரில் லக்னோ – மும்பை அணிகள் இடையே நடந்த போட்டியில் லக்னோ அணியும், டெல்லி – பெங்களூரூ அணிகள் இடையே நடந்த போட்டியில் பெங்களுரூ அணியும் வெற்றி பெற்றன.

லக்னோ – மும்பை அணிகள் இடையே நடந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 199 ரன் குவித்தது. அபாரமாக விளையாடிய கே.எல்.ராகுல். ஐபிஎல் தொடரில் தனது 3வது சதத்தை நிறைவு செய்தார். நேற்று தனது 100வது ஐபிஎல் போட்டியில் விளையாடிய அவர் சதமடித்து அசத்தியது குறிப்பிடத்தக்கது. 200 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி, 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 181 ரன் எடுத்து தொடர்ச்சியாக 6வது தோல்வியை சந்தித்தது

டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் மிரட்டலான பந்துவீச்சை வெளிப்படுத்திய பெங்களூரு அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூரூ அணி, 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்தது. 190 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய டெல்லி அணி இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் 16 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு டெல்லியை வீழ்த்தியது.

ஐபிஎல் தொடரில் இன்று மாலை 3.30 மணிக்கு நடக்க உள்ள போட்டியில் பஞ்சாப் – ஹைதராபாத் அணிகளும், இரவு 7.30 மணிக்கு நடக்க உள்ள போட்டியில் குஜராத் – சென்னை அணிகளும் மோத உள்ளன.