சர்வதேச அளவில் மும்பை விமான நிலையத்திற்கு 513வது இடம்

சர்வதேச அளவில் மும்பை மற்றும் டெல்லியில் உள்ள விமான நிலையங்கள் குறிப்பிட்ட நேரத்தை கடைப்பிடிப்பதில் மோசமான நிலையில் உள்ளது. இந்தியாவில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் இருந்து பிற நாடுகளுக்கு செல்லும் விமானங்களின் புறப்படும் நேரம் அவ்வபோது மாற்றப்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. உலக அளவில் ஒப்பிட்டு பார்க்கையில் மும்பையில் மற்றும் டெல்லியில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் இருந்து புறப்படும் விமானங்கள் தாமதமாக செல்கின்றன. வானிலை மாற்றம், தொழில்முறை கோளாறுகள் மற்றும் பிற காரணங்களினால் விமானங்களின் புறப்படும் நேரம் தாமதப்படுத்தப்படுகிறது.
international
சர்வதேச அளவில் உள்ள 513 விமான நிலையங்களை ஒப்பிட்டு பார்த்ததில் இந்தியாவில் உள்ள விமான நிலையங்கள் மோசமான நிலையில் உள்ளன. இதில் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமானநிலையம் 509வது இடத்தையும், டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் 451வது இடத்தையும் பெற்றது வருத்தப்படக்கூடிய ஒன்றாகும். இதனை தொடர்ந்து ஹைத்ரபாத் 246வது இடத்தையும், பெங்களூரு 262வது இடத்தையும், கொல்கத்தா விமான நிலையம் 270 இடத்தையும் பெற்றுள்ளது.

உலகில் உள்ள மிகப்பரிய 65 விமான நிலையங்களில் புறப்படும் நேரத்தை தாமதப்படுத்துவதில் ஏர் இந்தியா மிக மோசமான விமான நிலையமாக இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. ஏர் இந்தியாவின் பத்துக்கு ஆறு விமானங்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு புறப்படுவதில்லை என்று கூறப்படுகிறது.

இந்தியாவில் உள்ள விமானங்கள் அதிக அளவிலான சுமைகளை ஏற்றி செல்கின்றன. 2022ம் ஆண்டிற்குள் இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் இருந்து பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று ஆசிய பசுபிக் விமான போக்குவரத்து மையம் கூறியுள்ளது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-