இந்திய ரூபாய் மதிப்பு சரிவு: மோடி தலைமையில் இன்று பொருளாதார ஆய்வுக் கூட்டம்

டில்லி:

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவை நோக்கி சென்றுகொண்டிருப்பதால், இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார ஆய்வுக்கூட்டம் நடைபெற இருக்கிறது.

பெட்ரோல் டீசல் விலை உயர்வு, பணவீக்கம் அதிகரிப்பு, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட பிரச்சினைகளால் கடந்த சில நாட்களாக நாட்டின் பொருளாதார நிலை  கீழ்நோக்கியே பயணித்து வருகிறது. இது பொருளாதார நிபுணர்களிடையே கவலையை எற்படுத்தி உள்ளது.

இந்திய ரூபாயின் மதிப்பு குறைவதன் காரணமாக பங்குச் சந்தைகளிலும் ஏற்ற இறக்கங்கள் இருந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு  71 ரூபாய் 85 காசுகளாக இருந்தது.

இதைத்தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் ஆகியோருடன்  ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி இன்று  நிதித்துறை அதிகாரிகள் மற்றும் பொருளாதார நிபுணர்களுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

இன்று நடைபெற உளள  பொருளாதார ஆய்வுக்கூட்டத்தில், பெட்ரோல்- டீசல் விலை உயர்வு மற்றும் ரூபாயின் மதிப்பு சரிவு ஆகியவற்றைக் கட்டுப்படுத்த  தேவையான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: India's rupee depreciation: Today's Economic Review meeting led by Modi, இந்திய ரூபாய் மதிப்பு சரிவு குறித்து அச்சப்பட வேண்டாம்: அருண்ஜேட்லி
-=-