பெங்களூர்:
லகளவில் கொரோனா நிவாரண நிதியளித்தவர்கள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த அஜிம் பிரேம்ஜி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.

கொரோனா தொற்று நோய் உலகளவில் பரவியதுடன், பல்லாயிரக்கணக்கான மக்களின் ஆரோக்கியத்தை பாதித்துள்ளது. இதுமட்டுமின்றி புலம்பெயர்ந்த மக்களின் வாழ்வாதாரத்தையும் சிதைத்து விட்டது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பை சரி செய்ய உலகெங்கிலும் உள்ள பல கோடீஸ்வரர்கள் பணத்தை நன்கொடையாக அளித்து உதவி வருகின்றனர். இது போன்று நன்கொடை அளித்தவர்கள் பட்டியல் அண்மையில் வெளியானது. இதில் அதிகளவு நன்கொடை அளித்தவர்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ள இந்தியாவின் அசிம் பிரேம்ஜி இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இவர், விப்ரோ நிறுவனர் அஸிம் பிரேம்ஜி அறக்கட்டளை மூலம் ₹ 1000 கோடியும், விப்ரோ எண்டர்பிரைசஸ் மூலம் 25 கோடியும், விப்ரோ மூலம் 100 கோடியும் நன்கொடை அளித்துள்ளார்.

பார்ச்சூன் வெளியிட்ட முதல் -10 மிகப்பெரிய நன்கொடைகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே இந்தியர் இவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

டுவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி 1 பில்லியன் டாலர் நன்கொடையுடன் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். இந்த் தொகை அவர் மொத்த சொத்தின் கால் பகுதியாகும். இதற்கிடையில் மெலிண்டா கேட்ஸ் மற்றும் பில் கேட்ஸ் 255 மில்லியன் டாலர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளனர்.