U19 மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் ஆனது.

முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 17.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 68 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பின்னர் களமிறங்கிய இந்திய அணி 14 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 69 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

தென் ஆப்ரிக்காவில் நடைபெற்று வரும் இந்த தொடரில் இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகம், வங்கதேசம், பாகிஸ்தான் உள்பட 16 அணிகள் பங்கேற்றன.

அரையிறுதியில் இந்திய அணி நியூசிலாந்தையும், இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவையும் வீழத்தி பைனலுக்கு முன்னேறின.

இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதல பந்து வீசியது. இந்திய அணியின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி 17.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 68 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.

இதனைத் தொடர்ந்து 69 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணி 14 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 69 ரன்கள் எடுத்து உலகக்கோப்பையை வென்று சாம்பியன் ஆனது.