2வது டெஸ்ட் தொடர் : 6 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்த இந்திய அணி

இந்தியா, இங்கிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. 2வது டெஸ்ட் போட்டியின் முதல் ஆட்டம் நேற்று ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்று போட்டி தொடங்கப்பட்டது. 6.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 11 ரன்களை எடுத்துள்ளது.

ind-vs-eng

இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதலாவது டெஸ்ட் போட்டியில் 31 ரன்கள் வித்யாசத்தில் இந்தியாவை இங்கிலாந்து வெற்றிப்பெற்று 1-0 என முன்னணியில் உள்ளது. இதையடுத்து 2வது டெஸ்ட் போட்டி, லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற இருந்தது. ஆனால் மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டு 5 நாட்கள் கொண்ட டெஸ்ட் தொடர் 4நாட்களாக குறைக்கப்பட்டன.

இந்நிலையில் இன்று டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணி சார்பாக முதலில் களமிறங்கும் ஷிகர் தவாணுக்கு பதிலாக புஜாராவும், உமேஷ் யாதவுக்கு பதில் குல்தீப் யாதவும் அணியில் சேர்க்கப்பட்டனர். ராகுல் மற்றும் முரளி விஜய் தொடக்க வீரர்களாக களத்தில் இறங்கிய உடனே ஆட்டத்தை இழந்து வெளியேறினர்.

இந்நிலையில் இந்திய அணி 2விக்கெட்டுகளை இழந்து 11 ரன்களை எடுத்துள்ளது. விராட் கோலி மற்றும் புஜாரா தொடர்ந்து களத்தில் விளையாடி வருகின்றனர்.

இதேபோல், இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் மீது வழக்கு நடைபெற்று வருவதால், அவருக்கு பதிலாக கிறிஸ் வோக்ஸ் இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.