இந்தியா – ஆஸ்திரேலியா மோதும் டெஸ்ட் போட்டி: 12பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு

ஆஸ்திரேலியாவுகு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. விராட் கோலி தலைமையிலான அணியில் ரோஹித் சர்மா, ரஹானே உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

india

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 போட்டியில் 1-1 என இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா வெற்றிப்பெற்ற நிலையில் தொடர் சமனில் முடிந்தது.

இந்தையடுத்து இரு அணிகளும் மோதிக்கொள்ளும் முதல் டெஸ்ட் போட்டி நாளை அடிலெய்டில் நடைபெற உள்ளது. இந்த போட்டியை காண ரசிகர்கள் ஆர்வம் கொண்ட நிலையில் 12 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில், ரஹானே?(து.கேப்டன்), கேஎல் ராகுல், முரளி விஜய், புஜாரா, ரோஹித் சர்மா, ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட்( விக்கெட் கீப்பர்), அஸ்வின், முகமது ஷமி, இஷாந்த் சர்மா மற்றும் பும்ரா இடம்பெற்றுள்ளனர்.

இதே போன்று ஆஸ்திரேலிய அணியில் மார்கஸ் ஹாரிஸ், ஆரோன் பிஞ்ச், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ் , பீட்டர் ஹான்ட்ஸ்கோம்ப், டிராவிஸ் ஹெட் , டிம் பெயின் (கேப்டன், கீப்பர்), பாட் கம்மின்ஸ், மிட்ச் ஸ்டார்க், நாதன் லியோன், ஜோஷ் ஹாஸ்லேவுட் (துணை கேப்டன்) உள்ளிட்ட வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-