லக அளவில், பத்திரிகையாளர்கள் சுதந்திரமாகச் செயல்படும் நாடுகளின் பட்டியலை ‘தகவல் சுதந்திரத்துக்கான எல்லைகள் இல்லா நிருபர்கள் அமைப்பு’ வெளியிட்டுள்ளது. இதில்  இந்தியா 136-வது இடம் பெற்றுள்ளது.

உண்மையை உலகுக்கு எடுத்துரைக்கும் முயற்சியில் ஈடுபடும்போது, பத்திரிகையாளர்கள் பலர் தாக்குதல்களுக்கு உள்ளாவதும், பல சமயங்களில் கொலை செய்யப்படுவதும் உலகம் முழுதும் நடந்துவருகிறது.  உண்மையை வெளிக்கொண்டுவருதற்காக தங்கள் உயிர தியாகம் செய்த  போற்றுவதற்காகவே, ‘உலகப் பத்திரிகை சுதந்திர தினம்’ ஒவ்வொரு ஆண்டும் மே 3-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

இந்த நாளில் ‘தகவல் சுதந்திரத்துக்கான எல்லைகள் இல்லா நிருபர்கள் அமைப்பு’ உலக அளவில் பத்திரிகையாளர்களுக்கான சுதந்திரம் மிகுந்துள்ள நாடுகளின் பட்டியலை அதிகாரபூர்வமாக வெளியிடுகிறது. தற்போது வெளியிடப்பட்டுள்ள  பட்டியலில் நார்வே நாடு முதலிடத்தில் உள்ளது. இந்தியாவுக்கு 136-வது இடம் கிடைத்திருக்கிறது.

செய்தியாளர்களுக்கான சுதந்திரம், சட்டரீதியான பிரச்னைகள், அரசியல் இடையூறுகள், தாக்குதல்கள் என்று பல அம்சங்களைக் கருத்தில்கொண்டு இந்தத் தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 115 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் இந்தியாவில் மட்டும் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.