டில்லி,

ந்தியா பாகிஸ்தான் இடையே மீண்டும் ரெயில் போக்குவரத்து தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான ஒப்பந்தம் கடந்த சில நாட்களுக்கு முன்பு போடப்பட்டதாகவும், அதையடுத்து, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்த, பாகிஸ்தானின் கராச்சி வரை செல்லும் வகையில், தார் எக்ஸ்பிரஸ் ரெயில் மீண்டும் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த இரு நாடுகளுக்கு இடையேயான ரெயில் போக்குவரத்து 3 ஆண்டுகளுக்கு நடைமுறையில் உள்ளவாறு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த 2006ம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் இரு நாடுகளுக்கும் இடையே போட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் தற்போது மீண்டும் ரெயில் சேவை தொடங்கி உள்ளது.

இந்த ரயிலில் இந்தியா பாகிஸ்தான் இரு நாட்டு போலீஸ்காரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.  இந்திய எல்லையில் இந்தியப் போலீஸ்காரர்களும், பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் நாட்டுப் போலீசாரும் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்படு வார்கள். என கூறப்படுகிறது.

இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இருநாட்டு மக்களிடையே நல்லுறவை ஏற்படுத்தவும், மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகச் செய்தி தொடர்பாளர் முகமது பைசல் கூறியுள்ளார்.

இதற்கிடையில் காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவத்தினருக்கும், பாகிஸ்தான் ராணுவத்தினருக்கும் இடையே அவ்வப்போது உரசல்கள் ஏற்பட்டு வரும் நிலையில், தற்போது ரெயில் சேவை தொடங்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.