ரூபாய் மூலம் கச்சா எண்ணெய் கொள்முதல்: இந்தியா ஈரான் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது

டில்லி:

ரானிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய யூரோவுக்கு பதில் இந்திய ரூபாயை கொடுக்கும் முறைக்கு இந்தியா ஈரான் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

கச்சா எண்ணை கொள்முதல்  உலகம் முழுவதும் அமெரிக்க டாலர்கள் மற்றும் யூரோவால் விற்கப்பட்டு வருகிறது. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.

இதையடுத்து ஈரானுடன் இந்தியா தொடர்பு வைக்கக்கூடாது என்று டிரம்ப் மிரட்டி வந்த நிலையில், இந்தியா அதை கண்டுகொள்ளாமல் ஈரானுடன் நட்புறவு பாராட்டியது. அதைத் தொடர்ந்து, இந்தியா உள்பட 7 நாடுகள் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணை வாங்கலாம் என அமெரிக்கா கூறியது.

இந்த நிலையில், இந்தியா டாலர் மற்றும் யூரோவுக்கு பதிலாக ரூபாயை கொடுத்து கச்சா எண்ணை  வாங்க ஈரானுடன் இந்திய ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி  நாள் ஒன்றுக்கு 3 லட்சம் பேரல் வீதம் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்க உள்ள இந்தியா ஈரான் இடையே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

அதன்படி,  இந்திய அரசுக்கு சொந்தமான யூகோ வங்கி யூகோ வங்கியில் உள்ள ஈரான் எண்ணெய் கழக கணக்கில் இந்த பணத்தை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த 10 நாட்களில் கட்டண முறையை யுகோ வங்கி அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

அமெரிக்க தடையால், கப்பல் நிறுவனங்கள் ஈரானின் கச்சா எண்ணெயை கொண்டு வர மறுப்ப தால், தனது சொந்த கப்பல்களில் இந்தியாவுக்கு ஈரான் அரசு கச்சா எண்ணெயை அனுப்பி வருகிறது.

இந்நிலையில் கச்சா எண்ணெய் வாங்கி 60 நாட்கள் தவணையில் பணம் தரவும் இந்தியாவுக்கு ஈரான் சலுகை வழங்கி உள்ளது. ஓரு பேரல்  கச்சா எண்ணெய் என்பது கிட்டதட்ட 159 லிட்டர் அளவை கொண்டது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: India inks pact with Iran to pay crude bill in rupee, ரூபாயை மூலம் கச்சா எண்ணெய் கொள்முதல்: இந்தியா ஈரான் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது
-=-