ந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைனின் மரணத்தை வாங்குவதாக, உக்ரைன் வெளியுறவு துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா விமர்சித்துள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் 8 மாதங்களை கடந்தும் தொடர்ந்து வரும் நிலையில், இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணை வாங்குவதை உக்ரைன் விமர்சித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதியன்று போர் தொடுத்தது. இந்த போர் 8 மாதங்களை கடந்தும் தொடர்கிறது. உக்ரைனுக்கு கடுமையான  சேதங்களை ஏற்படுத்தி வந்தாலும், உக்ரைன் படையினர் ரஷ்ய படைகளை எதிர்த்து நிற்கின்றனர். உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளும் உதவி வருகின்றன.   அமெரிக்கா, உக்ரைனுக்குப் போர் தொடர்பாக நிதியுதவியும் அளித்துவருகின்றது.

உக்ரைனில் போரை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி வரும் இந்தியா, போரினால் ஏற்பட்டுள்ள எண்ணை இறக்குமதி சிக்கல்களைத் தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து எண்ணை வாங்கி வருகிறது. இது உக்ரைனுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து கூறிய வெளியுறவு துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா.  உக்ரைன் இந்தியாவில் இருந்து நடைமுறை ஆதரவை எதிர்பார்ப்பதாக  தெரிவித்துள்ளார். மேலும் இந்த  பிரச்சினைக்கு மத்தியில், இந்தியா ரஷ்யாவிடம் குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்கி வருவதை உக்ரைன் சுட்டிகாட்டியுள்ளது.

உக்ரைன் மிக மோசமான நிலையில் ரஷ்யாவினை எதிர்த்து போராடி வருகின்றது. ஆனால் இந்தியாவோ தொடர்ந்து ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கி வருகிறது. இதன் மூலம் ரஷ்யாவின் பொருளாதாரத்திற்கு வலு சேர்த்துக் கொண்டுள்ளது. இந்தியா தள்ளுபடி விலையில் எண்ணெய் வாங்குவது, உக்ரைன் மக்களின் ரத்தத்தினை தள்ளுபடியில் வாங்குகிறீர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

இந்தியா வாங்கும் ஒவ்வொரு பேரல் கச்சா எண்ணெய்-லும் உக்ரைன் மக்களின் இறப்பு உள்ளது. நாங்கள் இந்தியாவுக்கு நட்புறவுடனும், வெளிப்படையாகவும் இருக்கிறோம். இந்திய மாணவர்கள் உக்ரைனை விட்டு வெளியேறுவதை ஆதரித்தோம். ஆக இந்தியாவிடம் இருந்து நாங்கள் நடைமுறை ஆதரவினை எதிர்பார்க்கிறோம் என்று கூறியவர், உக்ரைனியர்கள் தினமும் செத்துக்கொண்டிருக்கின்றனர். நாங்கள் துன்பப்படுவதால், இந்தியாவுக்கு குறைந்த விலையில் ரஷ்யா எண்ணை வழங்கி வருகிறது என்றவர்,  ஐரோப்பிய யூனியன் எங்களை விட அதிக விலைக்கு ரஷ்யாவிடம் இருந்து எண்ணை இறக்குமதி செய்கிறது என சொல்வதை விடுத்து, மனிதாபிமான கண்ணாடியின் வழியே இந்தியா இந்த விவகாரத்தை பார்க்க வேண்டும்.

இந்திய தன்னுடைய வெளியுறவுக் கொள்கையை மாற்றி, உக்ரைன் மீது நடக்கும் தாக்குதலை போர் என அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.