பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியா 6வது இடம்: உலக வங்கி தகவல்

டில்லி:

லகம் முழுவதும் உள்ள பொருளாதார நாடுகளில் இந்தியா 6வது இடத்தில் உள்ளதாக உலக வங்கி ஆய்வறிக்கையில் தெரிவித்து உள்ளது.

இந்தியா உலகின் பொருளாதார நாடாக  உருவெடுத்துள்ளதாகவும், தற்போது 6 வது இடத்தை பெற்றிருப்பதாகவும்  உலக வங்கி புள்ளி விபர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்தஆண்டிக்கான  ( 2017)  ஆண்டிற்கான பொருளாதார புள்ளி விபர அறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது. இதில், 6- வது மிகப் பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது. பிரான்ஸ் நாட்டை பின்னுக்கு தள்ளி முன்னேறி உள்ளது.

கடந்த 7 காலாண்டுகளாக இந்தியாவின் ஜிடிபி  சரிந்து வந்த நிலையில், கடந்த 2017 ம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஜிடிபி உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம், நாட்டில் கொண்டு வந்த பண மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டியே காரணம் என்றும், இதன் காரணமாக இந்தியாவின்  ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.597 ட்ரில்லியன் டாலராக உயர்ந்திருப்பதாக தெரிவித்து உள்ளது.

உலக மக்கள் தொகையில் முன்னணியில் உள்ள சீனாவின் பொருளாதாரம் சரிவடைந்துள்ள நிலையில், இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதாக தெரிவித்து உள்ள உலக வங்கி, இந்தியாவின் பொருளாதாரம் 2017ம் ஆண்டில் 7.4% வளர்ச்சி அடைந்துள்ளது என்று குறிப்பிட்டு உள்ளது..

இந்தியாவின் வளர்ச்சி இதே நிலையில் உயர்ந்தால், 2032ம் ஆண்டு இந்தியாவின் பொருளாதாரம் உலக அளவில் 3வது இடத்தை பிடிக்கும் என்றும் தெரிவித்து உள்ளது.

Tags: India becomes world's sixth largest economy, World Bank ranking, பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியா 6வது இடம்: உலக வங்கி தகவல்