டில்லி,
னைத்து சுங்க சாவடியிலும் நவீன கழிவறை வசதி உடனடியாக ஏற்படுத்த: மத்திய அரசு அதிரடி உத்தரவிட்டு உள்ளது. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இந்த அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளார்.
மத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மத்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய 1992-ம் ஆண்டு ஒப்பந்த விதிப்படி  மத்திய அரசு சார்பில் நாடு முழு வதும் தேசிய நெடுஞ்சாலை மூலம் எக்ஸ்பிரஸ் பாதைகள் அமைக்கப்பட்டன. இவற்றில் ஆங்காங்கே சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டு அங்கு வரும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
tolleate
இதற்காக ஒப்பந்தக்காரர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சுங்க வசூல் தொடர்பான ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட போது, அனைத்து சுங்கச்சாவடிகளிலும் பயணிகளுக்கு நவீன கழிவறை வசதி ஏற்படுத்த வேண்டும், மருத்துவ வசதி இருக்க வேண்டும் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டு இருந்தது.
ஆனால், ஒப்பந்தப்படி இந்த வசதிகளை ஒப்பந்ததாரர்கள் செய்து கொடுக்கவில்லை.பெரும்பாலான சுங்கச் சாவடிகளில் எந்தவித வசதியும் கிடையாது.
இதையடுத்து மத்திய போக்குவரத்து மந்திரி நிதின்கட்காரி அனைத்து மாநில தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார்.
அதில், அனைத்து சுங்கச்சாவடிகளிலும் உடனடியாக நவீன கழிவறைகளை அமைக்க வேண்டும் என உத்தர விட்டார்.

கழிவறையியில், ஆண்கள், பெண்கள்  உரிய அறிவிப்புகளும் இடம் பெற செய்ய வேண்டும், கழிவறைகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மேலும் மத்திய அரசின் திட்டமான தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இந்த பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்றும் 15 நாட்களுக்குள் கட்டுமான பணிகளை ஆரம்பிக்க வேண்டும் என்று நிதின் கட்காரி உத்தரவிட்டு இருக்கிறார்.
நாடு முழுவதும் 370 சுங்கச் சாவடிகள் உள்ளன. அனைத்திலும் இந்த வசதிகள் ஏற்படுத்தப்பட இருக்கின்றன.
இதுமட்டுமல்ல, ஒவ்வொரு 50 அல்லது 60 கி.மீட்டர் இடைவெளியிலும் நவீன வசதிகளுடன் ஓட்டல், பெட்ரோல் நிலையம், கழிவறை வசதி ஏற்படுத்த வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டு இருக்கிறது.