ஐதராபாத்,
ந்தியாவில் இதுவரை 67 பேர், ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார்.
ஐதராபாத்தில் 3 நாட்கள்  நடைபெறும் மாநில டிஜிபிக்கள் மாநாட்டில் கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த தகவலை தெரிவித்தார்.
dgp-coonfernece
தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் 3 நாட்கள் காவல்துறை டி.ஜி.பி.க்களின் மாநாடு நடை பெறுகிறது. . இந்த மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், எல்லை தாண்டிய பயங்கரவாதம், ஊடுருவல், பிரிவினைவாதம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து எடுத்துரைத்தார்.
மேலும், உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஐஎஸ் பயங்கரவாதிகள்  இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டனர். அது கண்டுபிடிக்கப்பட்டு தடுக்கப்பட்டது.
ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு  உறுதுணையாக இருந்த  ஆதரவாளர்கள் 67 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசுடன் மாநில அரசுகள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.