முதல் டெஸ்ட் போட்டி: இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சால் 191 ரன்கள் மட்டுமே எடுத்த ஆஸ்திரேலியா

இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2வது நாள் முடிவில் 7விக்கெட்டுகளை இழந்து 191 ரன்களை மட்டுமே எடுத்தது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி டி20, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஏற்கெனவே டி20 போட்டிகள் முடிவடைந்த நிலையில் நேற்று முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் தொடங்கியது. முதல் நாள் ஆட்டத்தில் புஜாரா சதம் கடந்து 123 ரன்கள் எடுக்க இந்திய அணி 9 விக்கெட் இழப்பிர்கு 250 ரன்களை எடுத்திருந்தது.

astralia

இதனை தொடந்து 2வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. இந்திய அணி 250 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தன. ஆஸ்திரேலிய அணியின் ஹசில்வுட் 3 விக்கெடுகளையும், ஸ்டார்க், கம்மின்ஸ் மற்றும் நாதல் லயன் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியினர்.

அதன்பின்னர் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சை இன்று தொடங்கியது. போட்டி தொடங்கியதும் முதல் ஓவரிலேயே ஆரோன் பின்ச் விக்கெட் பறிகொடுத்தார். அவருக்கு பின் வந்த கவாஜா 28 ரன்களிலும், ஷென் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்தடுத்து வந்த ஆஸ்திரேலிய அணி வீரர்கள் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழக்க டிராவிஸ் ஹெட் மட்டும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் கடந்தார்.

தொடர்ந்து 2வது நாள் ஆட்ட நேர முடிவு வரை டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டார்க் இணை அவுட்டாகாமல் விளையாடி களத்தில் உள்ளனர். இதனால் ஆஸ்திரேலிய அணி 88 ஓவர்களுக்கு 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்களை எடுத்துள்ளது. இந்திய அணி சார்பில் அஸ்வின், இஷாந்த் சர்மா மற்றும் பும்ரா சிறப்பாக பந்து வீசினர்.

தற்போது வரை ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் இந்திய அணியை காட்டிலும் 59 ரன்கள் பின் தங்கிய நிலையில் உள்ளது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-