சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வாத்து அதிகரித்துள்ளதால்,  செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் இருந்து தலா 100 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இன்று மதியம் 12மணிக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளதால், கால்வாய் கரையோர மக்ககள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயல் தற்போது சென்னைக்கு 270 கிலோ மீட்டர் தென் கிழக்கே தீவிரப் புயலாக வங்க கடலில் மாண்டஸ் நிலை கொண்டுள்ளது. இந்த புயல் அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் சென்னை உள்பட பல மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இன்று இரவு மாண்டஸ் புயல்  புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே மாமல்லபுரத்தில் மாண்டஸ் புயல் கரையைக் கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புயல் காரணமாக பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. புயல் கரையை கடக்கும்போது பலத்த சூறைக்காற்றுடன் கனத்த மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், ஏரிகளில் நீர்வாத்து அதிகரிப்பால், செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் இருந்து தலா 100 கனஅடி நீர் திறந்துவிடப்பட உள்ள நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.