பரோட்டாவுக்கு வரி போடாமல் ஏய்ப்பு… நடிகர் சூரிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

Must read

மதுரையில் ‘அம்மன்’ என்ற பெயரில் நடிகர் சூரி நடத்தி வரும் உணவகத்தில் விற்கப்படும் உணவு வகைகளுக்கு ஜி.எஸ்.டி. பில் போடுவதில்லை என்று புகார் எழுந்தது.

இதனைத் தொடர்ந்து வருமான வரித்துறையினர் மேற்கொண்ட சோதனையில், உணவகத்தில் பில் இல்லாமல் பணம் வசூலிப்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர்.

மேலும், இந்த உணவகம் ஜி.எஸ்.டி. வரி செலுத்தவில்லை என்பதும், கொள்முதல் செய்யப்பட்ட உணவுப் பொருட்களுக்கு ஆவணங்கள் இல்லாததும் இந்த சோதனையில் தெரியவந்தது.

இதனை அடுத்து 15 நாட்களுக்குள் உணவக உரிமையாளர் மற்றும் மேலாளர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மதுரையில் தெப்பக்குளம், அரசு மருத்துவமனை, ரிசர்வ்லைன் சந்திப்பு, ஊமச்சிக்குளம் உள்ளிட்ட பல இடங்களில் அம்மன் என்ற பெயரில் நடிகர் சூரிக்கு சொந்தமான உணவகம் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

 

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article