உலகளவில் வளர்ச்சி அடையும் நகரங்களின் பட்டியலில் இடம்பெற்ற தமிழகம்

உலகளவில் வேகமாக வளர்ச்சி அடையும் நகரங்களில் பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த சென்னை, திருச்சி மற்றும் திருப்பூர் முதல் பத்து இடத்திற்குள் உள்ளன.

chennai

உலகளவில் பொருளாதர ரீதியாக அதிக வளர்ச்சி அடையகூடிய நகரங்கள் குறித்து ஆக்ஸ்போர்ட் நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அந்த ஆய்வின் அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், பொருளாதார அடிப்படையில் அதிக வளர்ச்சி அடையும் நாடுகளின் பட்டியலில் நியூயாா்க் முதல் இடத்திலும், டோக்கியோ இரண்டாவது இடத்திலும், லாஸ் ஏஞ்சல்ஸ் 3வது இடத்திலும், லண்டன் 4வது இடத்திலும் உள்ளன.

தற்போதைய வளர்ச்சி விகித்ததின் அடிப்படையில் 2035ம் ஆண்டிற்குள் பொருளாதார வளர்ச்சி அடையும் நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் முதல் 10 இடங்களில் இந்தியா கைப்பற்றியுள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த மூன்று நகரங்களும் இடம்பெற்றுள்ளன.

9.17 சதவிகித வளர்ச்சியுடன் சூரத் முதலிடத்திலும், ஆக்ரா 8.58 சதவிகித வளர்ச்சியில் 2வது இடத்திலும், பெங்களூரு 3வது இடத்திலும், ஹைதரபாத 4வது இடத்திலும், நாக்பூர் 5வது இடத்திலும், ஆறாவது இடத்தில் திருப்பூரும், ராஜ்கோட் 7வது இடத்திலும், திருச்சி 8வது இடத்திலும், சென்னை 9வது இடத்திலும், விஜயவாடா 10வது இடத்திலும் உள்ளன.