விழுப்புரம்: ஜெயின் கோவிலில் ரூ.1.5 கோடி மதிப்பு சிலைகள் திருட்டு….மர்ம ஆசாமிகள் துணிகரம்

விழுப்புரம்:

விழுப்புரம் அருகே ஜெயலின் கோவிலில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள ஐம்பொன் சிலைகளை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ளது பெரும்புகை கிராமம். இங்கு பழமையானத பகவான் மல்லிநாதர் ஜெயின் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூசாரியாக சந்திரன் உள்ளார். கோவிலின் ஒரு அறையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 35 ஐம்பொன் சாமி சிலைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று இரவு பூஜை முடிந்ததும் பூசாரி சந்திரன் கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.
இன்று காலை 530 மணிக்கு பூசாரி சந்திரன் கோவில் நடை திறப்பதற்காக வந்தார். அப்போது அங்கு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அறையில் இருந்த மல்லிநாதர்-கீர்த்தகரர், தர்மேந்தர், பத்மாவதி, ஜோலாம்பாள், பாசுவநாதர் உள்பட 6 ஐம்பொன் சிலைகள் மாயமாகியிருந்தன.

கொள்ளை போன சாமி சிலைகளின் மதிப்பு ரூ.1.5 கோடியாகும். 29 சிலைகள் பத்திரமாக இருந்தன. செஞ்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து சிலை திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
English Summary
in Villupuram near Jain temple Rs.1.5 crore worth idols theft