சிரியாவில் பயங்கர வெடி விபத்து…39 பேர் பலி

டமாஸ்கஸ்:

சிரியாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள இட்லிப் மாகாணத்தில் உள்நாட்டுப் போர் காரணமாக 25 லட்சம் மக்களில் 50 சதவீதம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.


இந்நிலையில் இட்லிப் மாகாணம் துருக்கி எல்லையோரம் உள்ள சர்மாடா நகர் அரசு ஆயுத கிடங்கில் இன்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

இதில் அருகில் இருந்த 2 வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. இடிபாடுகளில் சிக்கிய மக்களை ராணுவம் மீட்டது. எனினும் இந்த விபத்தில் 39 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் சிலர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: in Syria At least 39 people killed in a bomb blast, சிரியாவில் பயங்கர வெடி விபத்து...39 பேர் பலி
-=-