லண்டன்: பஞ்சாப் தனி நாடாக அறிவிக்க கோரி சீக்கியர்கள் போராட்டம்

லண்டன் :

பஞ்சாப் தனி நாடாக வேண்டும் என்று வலியுறுத்தி பிரிட்டனில் உள்ள பல சீக்கிய அமைப்புகள் இன்று லண்டனில் பேரணி நடத்தின. ‘சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ்’ என்ற சீக்கிய அமைப்புகளின் கூட்டணி சார்பில் இந்த பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியில் பஞ்சாப் தனி நாடாக உருவாவது குறித்து வரும் 2020-ம் ஆண்டுக்குள் பொது வாக்கெடுப்பு நடத்தக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது குறித்து ‘சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ்’ அமைப்பின் சட்ட ஆலோசகர் பத்வந்த் சிங் பனுன் கூறுகையில்,‘‘சுதந்திர பஞ்சாப் 2020ம் ஆண்டு வாக்கெடுப்புக்கான லண்டன் பிரகடனம் நிறைவேற்றப்பட்டது. வரலாற்றில் முன்பு இருந்தது போல் பஞ்சாப் மீண்டும் தனி நாடாக உருவாக்கப்படும் என்பதை உலக நாடுகளுக்கு அறிவிக்க அந்த தீர்மானம் ஐ.நா. சபையில் சமர்ப்பிக்கப்படும்’’ என்றார்.

பேரணியில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கலந்து கொண்டனர். மேலும், இந்த பேரணி குறித்து இந்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைக்க பிரிவினைவாதிகளின் சதி வேலை இது என இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
English Summary
in London: Sikhs protest to declare Punjab as separate state