அஸ்ஸாம்: 6 பேரை கொன்ற வழக்கில் 2 கிளர்ச்சியாளர்களுக்கு தூக்கு தண்டனை

கவுகாத்தி :

அஸ்ஸாமில் 6 பேரை கொன்ற வழக்கில் 2 கிளர்ச்சியாளர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அஸ்ஸாமில் போடோலாந்து தனி நாடு கோரி போராட்டம் நடந்தது. 1986-ம் ஆண்டு போடோ தேசிய ஜனநாயக முன்னனி எனும் போராளி குழு உருவாக்கப்பட்டு ஆயுதம் ஏந்தி போராடியது. இதனால் இந்த அமைப்பை பயங்கரவாத அமைப்பாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அவர்களை கட்டுப்படுத்த பாதுகாப்புப்படையினர் சண்டையிட்டும் வருகினறனர்.

2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தேகியாஜூலி மாவட்டத்தில் சந்திப்பூர் எனும் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மீது போடோ கிளர்சியாளர்கள் சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 6 பேர் கொல்லப்பட்டனர். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

கிளர்ச்சியாளர்கள் 4 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் இருவருக்கு தூக்கு தண்டனையும், 2 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அஸ்ஸாமில் தூக்கு தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல் முறை.




English Summary
in assam 2 rebels sentenced to death for killing 6 people