ஐரோப்பிய குடியேற்றத்தின் விளைவுகள் : ஒரு அலசல்

ண்டன்

ரோப்பிய நாடுகளின் குடியேற்றத்தால் நிலவியல் உட்பட பல மாற்றங்கள் உலகில் ஏற்பட்டுள்ளதாக ஆய்வுக் கட்டுரை ஒன்று கூறுகிறது.

இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் பலவற்றிலும் பிரிட்டன் போன்ற ஐரோப்ப நாடுகள் குடியேறி அந்த நாட்டை தங்கள் ஆட்சிக்குள் வைத்திருந்தன.    இதனால் ஏற்பட்ட விளைவுகள் குறித்து லண்டன் பல்கலைக் கல்லூரியின் இரு ஆய்வாளர்கள் லூயிஸ் மற்றும் மஸ்லின் என்பவர்கள் ஆய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுளனர்.

அதில், “இந்த பூமி கண்டத்தில் மனிதர்கள் கடல் கடந்து சென்று பல நாடுகளை அடைந்து வர்த்தகம் நிகழ்த்தி உள்ளனர்.   ஆனால் ஐரோப்பிய நாடுகள் கடந்த 16ஆம் நூற்றாண்டில் இருந்தே வெளிநாடுகளுக்கு குடியேறி அந்த நாடுகளைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட தொடங்கி விட்டன.   இந்த நாடுகளின் குடியேற்றத்தால்  ஏற்பட்ட முக்கிய விளைவுகள் உலக சந்தையை உருவாக்கியது, பல ஆப்ரிக்கர்கள் அடிமைகள் ஆனது மட்டும் அல்லாமல் நிலவியலிலும் பல மாறுதல் ஏற்பட்டது.

பூமி அடுக்கில் ஏற்படும் சலனங்கள், கடல்கள் அமிலமயமாகுதல், பிளாஸ்டிக்கினால் புதிய படிமங்கள் உண்டாவது, புதிய பல பயிர்கள் உருவாகுதல் உள்ளிட்ட பலவற்றுக்கும் இந்த குடியேற்றமும் ஒரு முக்கிய காரணம் ஆகும்.   இது எப்போது தொடங்கியது என சரியாக கூற முடியாவிட்டாலும்,  அணு ஆயுதங்கள் உபயோகப்படுத்தப்பட்ட பின்பு இதன் தாக்கங்கள் அதிகமாகி உள்ளன என சிலர் கூறுகின்றனர்.  இது தவறாகும்.

இந்த மாற்றங்கள் உண்மையில் 16ஆம் நூற்றாண்டில் இருந்தே ஆரம்பித்து விட்டது.   முக்கியமாக இந்த மாறுதல்கள் அமெரிக்க கண்டத்தில் தொடங்கியது.    அப்போது ஐரோப்பியர்கள் அங்கு அம்மை, தட்டம்மை, ஃப்ளூ, டைபாய்ட் போன்ற நோய்களின் கிருமிகளை அங்கு சென்று பரப்பி அந்த நாட்டு மக்களை அழித்தனர்.   இதனால் அங்குள்ள இனம் அழிந்து  ஐரோப்பிய கலப்பினம் உண்டானது.

அத்துடன் பூர்விக அமெரிக்கர்கள் வாழ்ந்து வந்த காடுகள் அழிக்கப்பட்டன.  அப்போது ஆரம்பித்த வெப்பமயமாகுதல் இன்றும் தொடர்ந்து அண்டார்டிக் துருவத்தில்  பனி உருக ஆரம்பித்துள்ளது.      அப்போது ஐரோப்பிய குடியேற்றக் காரர்களால் அழிக்கப்பட்ட காடுகளால் இப்போது அமெரிக்கா தவித்து வருகிறது.   அப்போது அமெரிக்காவில் வர்த்தகத்துக்கு தேவை என்பதால் ஆப்ரிக்கர்களை அடிமையாக்கி அங்கு கொண்டு வந்து பயன்படுத்த துவங்கினர்.   இதனால் கலாசார மற்றும் நாகரீக மாற்றம் உண்டானது.

அத்துடன் இந்தியா மற்றும் சீனாவில் காரம் அதிகம் சாப்பிட்டு வந்தனர்.   அதே நேரத்தில் ஐரோப்பாவில் உருளையும் தக்காளியும் முக்கிய உணவாகின.   இரு இடங்களிலும் ஏற்பட்ட உணவு மாறுதல்களால் சீனாவில் மக்காச் சோளம் பயிருடுவது அதிகரித்தது.   இதன் காரணமாக பல காடுகள் அழிக்கப்பட்டு விளை நிலங்கள் ஆகின.   அத்துடன் கப்பல் மூலம் எலிகள் போன்ற பல உயிரினங்கள் உலகமெங்கும் பரவின.   பயிர்களின் அழிவிற்கு எலிகள் முக்கிய காரணம் என்பது அனைவரும் அறிந்ததே.

தற்போதுள்ள நிலையில் பல இயற்கை வளங்கள் இந்த குடியேற்றங்களால் உலகம் எங்கும் அழிந்துள்ளன.  ஏற்கனவே இருந்ததை அழித்துவிட்டு அதையே புதிதாக உருவாக்க உலக மக்கள் முயன்று வருகின்றனர்.   ஆனால் இயற்கையை அழித்து விட்டால் மீண்டும் உருவாக்குவது எளிதல்ல.   தற்போது அதிகம் ஏற்படும் பூகம்பம் மற்றும் எரிமலை வெடிப்பது போன்றவைகளை மனிதனால்  இனி தடுத்து நிறுத்துவது இயலாத காரியமே” என குறிப்பிடப்ப்ட்டுள்ளது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Impacts of colonisation in world
-=-