தஞ்சாவூர் பெரிய கோவில் : சிலைக் கடத்தல் தடுப்பு ஐஜி திடீர் ஆய்வு

ஞ்சாவூர்

புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் தனது துறை அதிகாரிகளுடன் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

ராஜ ராஜ சோழனால் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட பெரிய கோவில் என அழைக்கப்படும் பிரகதீஸ்வரர் கோவில் தஞ்சை நகரில் அமைந்துள்ளது.    சுமார் 2 மாதங்களுக்கு முன் இந்த கோவிலில் சிலைகள் வைக்கப்பட்டிருந்த அறையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன். மாணிக்கவேல் ஆய்வு செய்தார்.   அப்போது அங்கிருந்த சில சிலைகள் மாற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன் தஞ்சை அருகே உள்ள புன்னை நல்லூர் சிவன் கோவிலிலும் சுமார் 10 சிலைகள் மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.   அதன் பிறகு குஜராத் மாநிலத்தின் அருங்காட்சியகத்தில் இருந்து ராஜராஜ சோழன், உலகமகாதேவி சிலைகள் மீட்கப்பட்டு தஞ்சைக்கு எடுத்து வரப்பட்டன.

சமீபத்தில் சென்னை தொழிலதிபர் ரன்வீர் ஷாவின் இல்லத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சிலைகள்  சோழர்காலத்தவை என கருதப்படுகிறது.   அதை ஒட்டி நேற்று தஞ்சை பெரிய கோவிலில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன். மாணிக்கவேல் தலைமையிலான குழு திடீர் என தஞ்சை பெரிய கோவிலில் ஆய்வு நடத்தியது.

நேற்று காலை பிரகதீஸ்வரர் கோவிலுக்கு வந்த குழுவில் சில காவலர்கள் கோவில் நுழைவு வாயிலில் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர்.  அதன் பிறகு ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையில் அதிகாரிகள் கோவிலினுள் ஆய்வு செய்தனர்.   ரன்வீர் ஷா வின் இல்லத்தில் கிடைத்த சிலைகள் தஞ்சை பெரிய கோவிலில் திருடப்பட்டிருக்கலாம் என்னும் சந்தேகத்தில் இந்த ஆய்வு நடந்ததாக கூறப்படுகிறது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: IG Pon Manickavel did surprise checking at Tanjore Bragadishwarar temple
-=-