மரியாதையான தொகுதி ஒதுக்கீடு இல்லை என்றால் தனித்து போட்டி….மாயாவதி அறிவிப்பு

லக்னோ:

மரியாதையான அளவுக்கு தொகுதிகள் கிடைக்கவில்லை என்றால் தனித்து போட்டியிடுவோம் என்று மாயாவதி அறிவித்துள்ளார்.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட சட்டமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கபப்படவுள்ளது. அதோடு அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தலுக்கும் நடைபெறவுள்ளது. பாஜக.வை வீழ்த்த காங்கிரஸ் தலைமையில் எதிர்கட்சிகள் ஒன்றிணைவதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதி இன்று நிருபர்களிடம் கூறுகையில்,‘‘ எந்த தேர்தலிலும் எந்த மாநிலத்திலும் கூட்டணிக்கு தயாராக உள்ளோம். மரியாதையான அளவுக்கு தொகுதிகள் ஒதுக்காவிட்டால் தனித்து போட்டியிட தயாராக இருக்கிறோம். மத்தியிலும், மாநிலங்களிலும் உள்ள பா.ஜ.க. அரசுகள் பிரித்தாளும் தந்திரத்தை கையாளுகிறது’’ என்றார்.
English Summary
If there is no respectable seat sharing we will contest alone says Mayawati