ராமர் கோவில் அமைக்காவிடில் பாஜக தோல்வியுறும் : தலைமை பூசாரி

யோத்தி

யோத்தியில் ராமர் கோவிலை அமைக்காவிட்டால் பாஜக வரும் நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடையும் என ராமர் கோவில் தலைமை பூசாரி எச்சரித்துள்ளார்.

கடந்த 2014 மக்களவை தேர்தலில் பாஜக அயோத்தியில் ராமர் கோவில் அமைப்பதாக வாக்கு கொடுத்திருந்தது.   ஆனால் இதுவரை அதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் பாஜக அரசு எடுக்கவில்லை.   இந்நிலையில் மத்திய அரசின் சிறுபான்மைத் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, “வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கோவில் அமைப்பது பற்றி பிரசாரம் செய்யாது.   முன்னேற்றத்தை மட்டுமே முன் நிறுத்தும்” என தெரிவித்துள்ளார்.

இந்த பேச்சு இந்து மத ஆர்வலர்களிடையே குறிப்பாக ராமர் கோவில் ஆதரவாளர்களிடையே அதிருப்தியை உண்டாக்கி உள்ளது.

இது குறித்து ராம் ஜென்ம பூமி கோவில் தலைமை பூசாரி ஆசார்ய சத்யேந்திர தாஸ், “பகவான் ஸ்ரீராமரின் ஆசிகளால் தான் பாஜக 2014ஆம் வருடம் ஆட்சியை பிடித்தது.   ஆட்சிக்கு வந்ததும் அவர்கள் பகவானையே மறந்து விட்டனர்.   உடனடியாக பாஜகவினர் கோவில் அமைக்க ஆரம்பிக்க வேண்டும்.  இல்லையெனில் ராமரின் சாபத்தால் அவர்கள் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை சந்திக்க நேரிடும்.

ஏற்கனவே ராமருக்கு கோவில் அமைக்காத பாவத்தினால் பாஜக கைரானா, கோரக்பூர், மற்றும் புல்பூர் தொகுதிகளில் தோல்வியை சந்தித்தது.   இதிலிருந்து அவர்கள் பாடம் கற்க வேண்டும்.  உடனடியாக கோவில் கட்டினால் ராமரின் ஆசிகளை மீண்டும் பாஜக பெற முடியும்.  இல்லியெனில் தோல்வி நிச்சயமே.” என தெரிவித்துள்ளார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: If BJP didnt built ram janma boomi temple they will loose in election : Chief priest
-=-