ஆராய்ச்சி மாணவர் ரோஹித் வெமுலாவை தற்கொலைக்கு  தூண்டிய ஹைதராபாத் பல்கலைகழக துணைவேந்தர்  பாபு ராவ், மாணவர் போராட்டத்தினைத் தொடர்ந்து, அங்கு நிலவிய பதட்டத்தை தணிக்க நீண்ட  விடுமுறையில் செல்ல கேட்டுக்கொள்ளப்பட்டார்.
அப்பாராவ் மீது வங்கொடுமை சட்டப் பிரிவின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
ஆனால், தற்பொழுது, எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, தடாலடியாக, அவர் மீண்டும் பணியில் சேர்ந்தார்.
அப்பாராவ் மீண்டும் பணியில் சேர்ந்துள்ளதைக் கண்டு கொதித்தெழுந்த மாணவர்கள் அவரைக் கண்டித்தும் “ரோஹித் வெமுலா மரணத்திற்கு  நீதிக்கேட்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்கள் போலிசாரின் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டனர்.
இதில் VC  அப்பாராவ், ABVP மாணவர்கள் , சில ஆசிரியர்களும் இணைந்து, குறிப்பாக  யார் யாரைத் தாக்கவேண்டும், யாரை கைது செய்ய வேண்டுமென பட்டியலை போலிசாருக்கு தந்து  இந்த அடக்குமுறையை ஏவிவிட்டதாகவும் போராடும் மாணவர்கள் குற்றம்சாட்டினர். மேலும், அப்பா ராவ் ஊழியர்களைத் தூண்டிவிட்டு வேலைநிறுத்தப் போராட்டம் செய்ய சொன்னதால் தான் உணவுவிடுதி மூடப்பட்டதாகவும் மாணவர்கள் கூறினர்.
இந்த அப்பா ராவ், கடந்த 2000ம் ஆண்டு, வார்டனாய் இருந்த போதும், இதே போன்றதொரு  தலித் மீதான பெரும்தாக்குதல் நடைபெற்ற்றது என நினைவு கூர்ந்தார் அங்கு பணியாற்றும் ஒரு அலுவலர்.
hu police crackdown

ஹைதராபாத் பல்கலை. மாணவர்கள்
மாணவர்கள் வெளியிட்டுள்ள பதாகைகளில் ஒன்று

 
போராட்டதை  தடுக்கும்பொருட்டு ஹைதராபாத் பல்கலைகழகம் கல்லூரிக்கு திங்கட்கிழமை வரை விடுமுறை அறிவித்து போராட்டத்தை சீர்குலைக்க முயன்றது. சாப்பாடு, தண்ணீர், மின்சாரம், வைஃபையை  துண்டித்தது. மேலும்,  பாதுகாப்பு கேட்டு காவல்துறைக்கு கீழ்கண்ட மனுவினை அளித்தது:
hu lettervc1
 
அதில், VC யின் வீடு அடித்து நோருக்கப்பட்டதாகவும், எனவே, பாதுகாப்புக் காரணங்களுக்காக வெளி ஆட்களை அனுமதிக்க  முடியாது, வளாக வாசல் கதவைப் பூட்டி வைக்கப் போவதாகவும், அதற்கு காவல்துறை தகுந்த பாதுகாப்பு அளிக்க  வேண்டுமெனக் கோரியிருந்தது.
இந்தியப் பாராளுமன்றத்தில் தன்னுடைய நாடகத்தனமான வீராவேசப் பேச்சில், ஸ்மிரிதி இரானி, தான் ஒரு தாய் என்றும், தன்னால் ஒரு குழந்தையை கொடுமைப்படுத்தவதைக் குறித்து நினைத்துக்கூட பார்க்கமுடியாது என்றும், ரோஹித்வெமுலாவை குழந்தை என்றும் குறிப்பிட்டுப் பேசியிருந்தார்.
ஆனால் அவரது கீழ் இயங்கும் ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில், தற்போது மாணவர்களுக்கு தண்ணீர் மற்றும் உணவு இன்றிப் பட்டினியில் தவிக்கவிடப் பட்டுள்ளனர். மாணவர்கள் போலிசாரின் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டனர். அதில் ஒரு மாணவர் உதய் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.  பெண் மாணவிகள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதுடன் வன்புணர்வு செய்யப்படுவார்கள் என அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
hu udhaybanu2
போலிசாரால் தாக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள உதய்

பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில், காவல்துறை தடியடியால் 44 பேர் காயமடைந்து மருத்துவ மனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.  51 மாணவர்கள் கைது செய்யப்பட்டு பல்வேரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது! மாணவர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியர் இலட்சுமி நாராயணாவும் கைது செய்யப்பட்டார்.
‪‎பிரசந்தா  எங்கே ?
ரோஹித்துடன் பழிவாங்கப்பட்ட அம்பேத்கர் மாணவர் சங்கத்தின் ஐந்து மாணவர்களில் ஒருவரான ப்ரசந்தா, ரோஹித் மரணத்திற்குப் பிறகு தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருபவர் . அவரை  காணவில்லை! காவல்துறை எங்கு கொண்டு சென்றது என்பது தெரியவில்லை என புலம்பிவந்த நிலையில், அவரையும் போலிசார் கைது செய்துள்ளனர் என்பது தெரிய வந்தது.
‪‎ரோஹித்தின் அம்மா:
hu rohith mother 2 hu rohith mother in campus
‪‎ரோஹித்தின் அம்மா பல்கலைக்கழக வளாகத்தில் உட்கார்ந்து போராட்டம்!
‪‎
கண்ணையாகுமார் உள்ளே செல்ல அனுமதி மறுப்பு.:
மேலும், இந்தப் நீதிப் போராட்டத்தில் கலந்துகொள்ள JNU மாணவர் தலைவர் கண்ணையாகுமார் கலந்துகொள்வதாக இருந்தது.
24ம் தேதியன்று நடைபெற்ற கூட்டத்தில், கண்ணையாகுமார் பேசும் போது பா.ஜ.க வினரால் செருப்பு வீசப் பட்டது. அவர்களை போலிசார் அப்புறப்படுத்தினர்.
‪‎பல்கலைக்கழகம் சிறையானது:
உணவு இல்லை! தண்ணீர் இல்லை! மின்சாரம் இல்லை! இன்டெர்நெட் இல்லை! வங்கி ATM கார்டில் பணம் எடுக்க முடியாது!
பெரும்திரள் ‪‎போலீஸ் குவிக்கப் பட்டு, பல்கலைக்கழகத்தின் பிரதான வாயில் தவிர்த்து, அனைத்தும் மூடப்பட்டது. சிறைப் போல் மாற்றப் பட்டுள்ளது.
ஜாமின் தர மறுத்த நீதிமன்றம்:
கைது செய்யப் பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஜாமின் வழங்க ஹைதரபாத் கிளை நீதிமன்றம் மறுத்துவிட்டது.  MHRD  யால் நியமிக்கப்பட்ட விசாரனணைக்குழுவின் விசாரணை முடிவதற்குள் எப்படி அப்பாராவ் மீண்டும் பணியில் சேர்ந்தாரென பதில்மனு தாக்கல் செய்ய மார்ச் 28ம் தேதி வரை  அவகாசம் கொடுத்துள்ளது  நீதிமன்றம்.
 
ஜனநாயகத்தின் மீது ‪‎மீண்டும் ஒரு தாக்குதல்!
‪‎டெல்லி JNUவில் , ஹைதராபாத் பல்கலைக்கழகம் மீதான தாக்குதலைக் கண்டித்தும், ரோஹித் மரணத்திற்கு நீதிக் கோரியும், இன்று போராட்டம் நடைபெற்றது.
‪தெலுங்கானா மாநில முதல்வர் சந்திர சேகர் ராவ், மத்திய அரசுக்கும், ஆர்.எஸ். எஸ். சித்தாந்தத்திற்கும் ஆதரவாக செயல்படுகின்றது என மாணவர்கலள் குற்றம் சாட்டுகின்றனர்.
“பாசமிகு தாய்”இரானி எங்கே ?
Smriti-Irani_Mumbai_PTI
இவ்வளவு நடைப்பெற்றாலும் பிரதமர் மோடியோ, அமைச்சர் இராணியோ வாயைத்திறக்காமல் வேடிக்கை பார்த்துவருவது கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.