டில்லி:

நீட் தேர்வில் உள்ளாடை அகற்றச் சொன்ன விவகாரத்தில் மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த 7ம் தேதி, நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு எழுத வந்த மாணவ, மாணவிகளிடம் சிபிஎஸ்இ கல்வி வாரிய ஆசிரியர்கள் கடுமையான கெடுபிடிகளை கையாண்டனர்.

சாரி அணியக்கூடாது என்றும், முழுக்கை சட்டை போடக்கூடாது என்பது போன்ற பல்வேறு கெடுபிடிகள் செய்யப்பட்டன.  நீண்ட கைகளை கொண்ட சுடிதான் போட்டிருந்த பெண்களின் கைகள் வெட்டி எடுக்கப்பட்டன.

இதன் உச்சக்கட்டமாக   கேரளாவில் உள்ள  கண்ணுார் பகுதியில் நீட் தேர்வு எழுத வந்த மாணவிகளின்  போது உள்ளாடையை அகற்ற செய்து அநாகரிகமாக ஒருசிலஆசிரியைகள் நடந்துகொண்டனர்.

இந்த சம்பவம், தேர்வு எழுத வந்த பிற மாணவ, மாணவியரை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது .இதற்கு பல தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். முதல்வர் விஜயன் தனது கண்டனத்தை பதிவு செய்தார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில்,  இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இதற்கிடையில், மாணவியின் உள்ளாடையை அகற்றச் சொன்ன விவகாரத்தில், டில்லியில் உள்ள சிபிஎஸ்இ தலைவர் விளக்கம் அளிக்குமாறு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

4 வார காலத்திற்குள் பதிலளிக்க சிபிஎஸ்இக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.