டெல்லி: லக்கிம்பூர் கெரி வன்முறையைக் கண்டித்து, மாநில பாஜக அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்த  சில மணிநேரங்களில், பாஜக எம்.பி.  வருண் காந்தி மற்றும் மேனகா காந்தி ஆகியோர் பாஜக தேசிய செயற்குழுவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

லக்கிம்பூர் கேரியில் நடந்த  வன்முறை சம்பவம் குறித்து பாஜக எம்.பி. வருண் காந்தி, மத்திய, மாநில பாஜக அரசுகளை கடுமையாக விமர்சித்திருந்தார்.  “விவசாயிகளின் அப்பாவி இரத்தத்திற்கு பாஜக அரசுதான் பொறுப்பு’ என்றும். போராட்டக்காரர்கள் கொலை மூலம் அமைதியாக இருக்க முடியாது.  நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் கடுமையாக சாடியிருந்தார்.

இந்த நிலையில், இன்று பிஜேபி தலைவர் ஜே பி நட்டா கட்சியின் 80 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டார். அதில், வருண் காந்தி மற்றும் மேனகா காந்தியின்  பெயர் இடம்பெறவில்லை.

பாஜகவின் தேசிய செயற்குழுவில் ஏற்கனவே வருண்காந்தி, மேனகா காந்தி  உள்பட கட்சியின் முக்கிய தலைவர்களை இடம்பெற்றிருந்தனர். இந்த தேசிய குழுதான், மத்திய அரசு எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகள் பற்றி விவாதித்தும், அடுத்து கட்சி எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கும். தற்போது பாஜகவின் தேசிய செயற்குழுவில் இருந்து வருண்காந்தி நீக்கப்பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லக்கிம்பூர் கேரி சம்பவதுக்கு நீதி வேண்டும்! யோகி அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய பாஜக எம்.பி. வருண்காந்தி…