மும்பை: அதானி நிறுவனத்தின் மீது வழக்கு தொடுக்க உள்ளதாக அதானி நிறுவனம் கூறிய நிலையில்,  வழக்கை சந்திக்க தயார் என  ஹிண்டன்பர்க் நிறுவனம்  தெரிவித்து உள்ளது.

நிதி முறைகேடு, போலி பரிவர்த்தனை உள்ளிட்ட புகார்கள் ெதாடர்பான அறிக்கையை ஹிண்டன்பர்க் ரிசர்ச் வெளியிட்டதால், இரண்டாவது நாளாக அதானி குழுமத்தின் பங்குகள் கடுமையாக வீழ்ச்சி அடைந்தன. அமெரிக்காவின் பிரபல ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்தியாவை சேர்ந்த பிரபல அதானி குழுமம் கடந்த பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருகிறது. அக்குழுமத்துக்கு மிக அதிக அளவில் கடன் உள்ளது. வரவு செலவு அறிக்கையில் மோசடி, வரி ஏய்ப்பு, மோசடியாக பண பரிமாற்றம், போலியான பெயரில் நிறுவனங்கள், உறவினர்களை பயன்படுத்தி போலியான பரிவர்த்தனை அறிக்கை ஆகிய முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது’ என்று பரபரப்பு அறிக்கையை வெளியிட்டது.

இதனால் அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு ரூ.46,000 கோடி அளவிற்கு வேகமாக சரிந்தது. 120 பில்லியன் டாலர் (ரூ.9.84 லட்சம் கோடி) சொத்து மதிப்பைக் கொண்டு உலக பில்லியனர்கள் பட்டியலில் அதானி 3ம் இடத்தில் இருந்தார். ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கையால், 4ம் இடத்திற்கு அதானி தள்ளப்பட்டார். இந்நிலையில் ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து அதானி குழுமம் வெளியிட்ட அறிக்கையில், ‘அதானி குழுமத்தின் மதிப்பை குலைக்கும் உள்நோக்கத்தில் ஆதாரமற்ற அறிக்கையை ஹிண்டன்பர்க் வெளியிட்டுள்ளது. எங்கள் சரிவிலிருந்து ஹிண்டன்பர்க் ஆதாயமடைய முயற்சிக்கிறது.

இந்தியாவின் பிரபல வணிக நிறுவனமான அதானி நிறுவனம், வரவு செலவு அறிக்கையில் மோசடி, வரி ஏய்ப்பு, மோசடியாக பண பரிமாற்றம், போலியான பெயரில் நிறுவனங்கள், உறவினர்களை பயன்படுத்தி போலியான பரிவர்த்தனை அறிக்கை என பல குற்றச்சாட்டுகளை, அமெரிக்காவின் பிரபல ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் குற்றம் சாட்டி உள்ளது. இதனால், அந்நிறுவனத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சி  அடைந்து வருகிறது.

ஆனால், ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என அதானி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.  தங்களது நிறுவன  வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தும் விதமாக ஹிண்டன்பர்க் நிறுவனம் போலியாக  அறிக்கை வெளியிட்டு, எங்களின் வீழ்ச்சியில்  பலனடைய பார்க்கின்றது. முதலீட்டாளர்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை தகர்க்க பார்க்கிறார்கள் என தெரிவித்து உள்ளது.

எங்கள் நிறுவனத்தின் போதிய சரியான தகவல்களை வைத்து ஹிண்டர்ன்பர்க் ஆய்வு செய்யவில்லை. எங்களிடம் எந்த தொடர்பும் கொள்ளவில்லை. இது தவறானதொரு தகவல் என்றும் கூறியுள்ளது. மேலும், ஹிண்டர்ன்பர்க் நிறுவனத்தின் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்து வருவதாகவும் அதானி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பர்க், தனது நிலையில் இருந்து பின் வாங்க மாட்டோம் என தெரிவித்து உள்ளது. நாங்கள்   அதானி குழுமத்திடம் 88  கேள்விகளை எழுப்பினோம். ஆனால் ஒன்றிற்கு கூட இதுவரையில் அதானி பதிலளிக்கவில்லை. இதற்கிடையில் எங்கள் மீது வழக்கு தொடரப் போவதாக தெரிவித்துள்ளது. எப்படியிருந்தாலும் நாங்கள் பின் வாங்க போவதில்லை என உறுதியாக தெரிவித்துள்ளது.

எங்கள் மீதும், ஆய்வறிக்கை மீதும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனில் அதானி குழுமம் நினைத்தால், அமெரிக்காவிலேயே அதனை எடுக்கலாம். அப்படி வழக்கு தொடரும்பட்சத்தில் நாங்கள் பல ஆவணங்களை கேட்போம். அதனை சரியாக கொடுத்தாலே போதும். நாங்கள் இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து ஆய்வு செய்து வெளியிட்ட அறிக்கை அது. அதனை அதானி குழுமம் ஆய்வு செய்யாமல் கொடுத்துள்ளதாக கூறுவது தவறு என ஹிண்டர்ன்பர்க் கூறியுள்ளது.

இதற்கிடையில் இரண்டாவது நாளாக இன்றும் அதானி குழும பங்குகள் பலத்த சரிவினைக் கண்டுள்ளன.  முதலீட்டாளர்கள் அச்சம் இதற்கிடையில் செபியும் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், இனி வரவிருக்கும் நாட்களிலும் இந்த சரிவானது தொடரலாமோ என்ற அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இன்னும் அதானி குழும பங்குகள் என்னவாகுமோ? முதலீட்டாளர்கள் கவனமுடன் ஸ்டாப் லாஸ் வைத்து வர்த்தகம் செய்வது பாதுகாப்பினை தரும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.