டெல்லி: பிரதமர் மோடியின் நண்பர் கவுதம் அம்பானி நிறுவனம் மீதான அமெரிக்க நிறுவனத்தின் குற்றச்சாட்டை தொடர்ந்து, உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 4வது இடத்தில் இருந்த கவுதம் அதானி, 7வது இடத்துக்குத் தள்ளப்பட்டார் . அவரது பங்குகள் வேகமாக சரிந்து வருகிறது. 10 அதானி குழுமப் பங்குகள் 2 நாட்களில் சந்தை மதிப்பில் ரூ.2.37 லட்சம் கோடியை இழந்துள்ளன.

இந்தியாவைச் சேர்ந்த பிரபல தொழில் நிறுவனமான அதானி குழுமம் பல நாடுகளிலும் தனது தொழிலை நடத்தி வருகிறது. அனைத்து துறைகளிலும் காலடி வைத்துள்ள இந்த நிறுவனம்  பல ஆண்டுகளாகவே மோசடியான வரவு செலவு அறிக்கை, வரி ஏய்ப்பு, சட்ட விரோதமான பணபரிவர்த்தனை என மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்காவின் பிரபல ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்டுள்ளது. ,அதானி குழுமத்தைச் சோ்ந்த 7 முக்கிய நிறுவனங்கள் தங்களது நிதிநிலையை உண்மைக்குப் புறம்பான முறையில் வலுவாகக் காட்டுவது, அதன் மூலம் பங்குச் சந்தையை ஏமாற்றி லாபம் பாா்த்தது, வெளிநாடுகளில் ஷெல் நிறுவனங்களை உருவாக்கி அவற்றின் மூலம் சட்டவிரோத பணப் பரிவா்த்தனையில் ஈடுபட்டது என குற்றம் சாட்டியது. இது நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதன் காரணமாக, அதானி நிறுவனத்தின் பங்குகள், கடுமையாக சரிவை சந்தித்து வருகின்றன. இன்று 2வது நாளாக   காலை பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கியதும், அதானி யின் சொத்து மதிப்பு 18 பில்லியன் டாலர்கள் சரிந்து 100 பில்லியன் டாலர்களாகக் குறைந்தது. ‘2 நாளில் மட்டும் ரூ.2.37 லட்சம் கோடி இழப்பை சந்தித்துள்ளது தெரிய வந்துள்ளது.

இதன் காரணமாக, உலகப் பணக்காரர்கள் பட்டியலில், மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸுக்கு அடுத்த இடத்தில் உள்ளார். பில் கேட்ஸ் சொத்து மதிப்பு 104 பில்லியன் டாலர்கள். இதனால் 7வது இடத்தக்கு தள்ளப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு அதானி குழுமத்தின் பங்குகள் மிகப்பெரிய உயர்வை சந்தித்த போது, அதானி, உலகப் பணக்காரர்களில் இரண்டாம் இடத்தைப் பிடித்திருந்தார். அதன்பிறகும் கூட, மிக நீண்ட காலம் மூன்றாவது இடத்திலேயே அதானி நீடித்திருந்தார். அதானியின் தொழில் போட்டியாளரும், ரிலையன்ஸ் நிறுவனருமான முகேஷ் அம்பானி, 83 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன், பணக்காரர்கள் பட்டியலில் 11வது இடத்தில் உள்ளார்.

இதைaடுத்து, அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள், உரிமைப் பங்கினை விற்பனை செய்ய நாளை திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.