இம்பால்: இமாச்சல பிரதேச்த்தில் இன்று காலை 10 மணி வரையிலான வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, பாஜக 33 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 31 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  இதுமட்டுமின்றி 4 இடங்களில் சுயேச்சைகள் முன்னிலை பெற்றுள்ளனர். இதனால், அங்கு தேர்தல் முடிவுகள் குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும் என தெரிகிறது..

68 இடங்களைக்கொண்ட இமாச்சல பிரதேச சட்டசபைக்கு கடந்த மாதம் 12-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு  நடைபெற்றது. இந்த வாக்குகள் கடந்த ஒரு மாதமாக பாதுகாப்பாக வைக்கப்பட்டு  இன்று எண்ணப்படுகின்றன. இதற்காக மாநிலத்தின் 59 இடங்களில் 68 வாக்கு எண்ணிக்கை அரங்குகள் அமைக்கப்பட்டு  வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இமாச்சல பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைப்பதற்காக பிரதமர் மோடி தலைமையில் பா.ஜனதாவினர் இங்கும் தீவிர பிரசாரங்களை மேற்கொண்டனர். அதேநேரம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் தீவிரமாக களத்தில் வரிந்து கட்டியிருந்தன. மாநிலத்தில் ஆட்சியமைக்க 35 உறுப்பினர் ஆதரவு தேவைப்படும் நிலையில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைப்பது கடினம் என்ற நிலையே தொடர்கிறது.

தேர்தல் முடிவுகளுக்கு https://results.eci.gov.in/ இணையதளத்தை பார்க்கலாம்.