சென்னை: சென்னையில் ஹெல்மெட் விதிமீறல் தொடர்பாக கடந்த 44 நாட்களில் 1.36லட்சம் வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும், ரூ.1.36கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டு இருப்பதாகவும் போக்குவரத்து காவல்துறை தெரிவித்து உள்ளது.

இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது பின்னால் அமர்ந்திருப்பவர்களும் ஹெல்மெட் போட வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ள நிலையில், தமிழ்நாட்டில் இரு சக்கர வாகனத்தின் பின்னாடி உட்காருபவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என சென்னை போக்குவரத்து காவல்துறை கடந்த மே மாதம் அறிவிப்பு வெளியிட்டு, மே 23ந்தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சென்னையில் ஹெல்மெட் விதிமீறல்கள் தொடர்பாக கடந்த 44 நாட்களில் மட்டும் ரூ.1.36 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்து உள்ளது.  மே 23ந்தேதி முதல் ஜூலை 5ந்தேதி வரையிலான 44 நாளில்,  1 லட்சத்து 36 ஆயிரத்து 656 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும்,   வாகன ஓட்டிகளிடம் 72 லட்சத்து 74 ஆயிரத்து 400 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், பின்னால் அமர்ந்து சென்றோரிடம் 63லட்சத்து 91ஆயிரத்து 200ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாகவும், மொத்தம் ரூ.1.36கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டு இருப்பதாகவும் போக்குவரத்து காவல்துறை தெரிவித்து உள்ளது.
https://patrikai.com/helmets-are-mandatory-for-those-who-sit-in-the-back-seat-in-tamil-nadu-from-today/