கர்நாடகாவில் கனமழை: கபினி அணையில் இருந்து வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி நீர் திறப்பு

மைசூர்:

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து f மழை பெய்து வருவதால் காவிரியில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 50ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக முதல்வர் குமாரசாமியின் உத்தரவை தொடர்ந்து வினாடிக்கு 38 ஆயிரம் கனநீர் திறந்து விடப்பட்ட நிலையில் தற்போது 50 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக, கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகள் நிரம்பும் தருவாயில் உள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி, உபரி நீர் அணைத்தும், காவிரியில் திறந்துவிடப்பட்டுள்ளது. வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக காவிரியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கர்நாடகத்தில் காவிரிக் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் இருந்து திறக்கப்பட்டுள்ள நீர் நாளை இரவுக்குள் தமிழகப் பகுதியான பிலிக்குண்டை வந்தடையும்.  தருமபுரி, சேலம் மாவட்டங்களில் காவிரிக் கரையோரப் பகுதி மக்கள் எச்சரிக்கை யாக இருக்கும்படி  கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

காவிரியில் தொடர்ந்து தண்ணீர் வந்துகொண்டிருப்பதால், மேட்டூர் அணையின் நீர் மட்டம் தற்போது 70அடியை தொட்டுள்ளது.
English Summary
Heavy rain in Karnataka: 50 thousand cubic feet of water opened from Kabini dam in cauvery river